433
இணைவாயின் சாய்வு 45° கோணம் படும்படியாக வெட்டி செங்கோணமாக அமையும்படி இணைத்தல்
miterer: (அச்சு.) செங்கோண இணைப்பான்: அச்சுக்கலையில் கரையோரங்கள், கோடுகள் முதலியவற்றை செங்கோணத்தில் இணைப்பதற்குப் பயணம் ஒரு சாதனம். இதனைக் கையினாலோ விசையினாலோ இயக்கலாம்
miter gear: (எந்.) செங்கோண இணைப்புப் பல்லிணை: ஊடச்சுக்கு 45° சாய்வாக உள்ள பற்களையுடைய பல்லிணை
milter plane: (மர.வே.) செங்கோண இணைப்புத் தளம்: மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்குத் துணை செய்யும் அமைவுடன் பயன்படுத்தப்படும் ஒரு தளம்
miter-saw cut: (மர.வே.) கோண வெட்டு ரம்பம்: மரத்தைத் தேவையான கோணத்தில் வெட்டுவதற்குப் பயன்படும் ரம்பம்
miter square: (மர.வே.) கோண மட்டச்சதுரம்: மூலமட்டப் பலகை போன்ற ஒரு கோண மட்டம் கருவி. ஆனால், இதில் 90°, 45° கோணங்களை அமைக்க இடமளிக்கும் ஒரு தலைப்பினைக் கொண்டது
miter wheel: சாய் பற்சக்கரங்கள்: ஊடச்சுக்கு 45° சாய்வாக உள்ள பற்களையுடைய சக்கரங்கள்
mitography: (அச்சு.) திரையச்சுக்கலை: பட்டுத்திரைச் சீலை அச்சுக்கலை
mixture: (வேதி.) கலவை: வேதியியல் முறையில் ஒன்றோடொன்று இணையாத இரண்டு அல்லது மூன்று பொருட்களின் கலவை
Μ.Μ.F.: (மின்.) காந்த இயக்கு விசை: (கா. இ. வி.)
mobility: (மின்.) இயங்கு திறன்: மின்கடத்தாத் திண்மப் பொருளில் மின்னோட்ட ஊர்தியின் வேகவீதம். பயன்முறை மின்புலத்தில் வேகவீதத்தின் வீத அளவு. இதனை செ.மீ./ஒல்ட்/ வினாடி என்ற அளவு முறையில் குறிப்பிடு
modeling: உருப்படிவக்கலை: காட்சி மாதிரிகளை உருநிலைப் படிவங்களாக உருவாக்குதல்
mock-up: (வானூ.) எந்திர மாதிரிப் படிவம்: செய்யக் கருதியுள்ள மாதிரிப் படிவம்
modulation: (இயற்.) அலைமாற்றம்: வானொலியில் அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமைத்தல். (i) பேச்சு ஒலிகளையும், (ii) ஊர்தி அலையினையும், (iii) வெளிச் செலுத்தப்படும் அலை மாற்றிய அலையினையும் குறிக்கிறது. ஆழ அலை மாற்றம்=x/y
module: (க.க.) அளவை அலகு: கட்டுமானப் பொருட்களின் தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்புதற்கான நீட்டலளவை அலகு
modulus: நிலை தகவு: மடக்கைகளின் வகை மாற்றத்திற்கான நிலையான வாய்ப்பாடு
modulus of : மின் விசை நிலை தகவு: இழு விசைத் திரிபு நெகிழ் வரம்பிற்குள் இருக்கும்போது, ஒர் அலகுப் பரப்பின் மீதான அழுத்தத்திற்கும். அதற்கு இணையான் ஒர் அலகு நீளத்தின் மீதான இழுவிசைக்குமிடையிலான வீத அளவு