பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

பொருட்கள் தயாரிக்கப்பயன்படுகிறது

motion : (இயற்.) இயக்கம் : ஒரு பொருள் இயங்கி நிலை மாற்றம் பெறுதல்

motion study : (க.க) இயக்க ஆய்வு : சில பணிகளைச் செய்திடும் தொழிலாளர்களின் நடமாட்டங்களைக் கண்காணித்தல் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து இயக்கத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் இந்த ஆய்வு செய்யப்படுகிறது

motive power : (பொறி) எந்திர விசை :எந்திரத்தில் இயக்கத்தைத் தோற்றுவிக்கும் திறமுடைய ஆற்றல்

motometer : (எந்.) இயக்கமானி: நீராவி எஞ்சினின் வேகத்தைக் காட்டும் கருவி. இதனை வேகமானி என்றும் கூறுவர்

motor.(மின்.) (1) மின்னோடி : மின்விசையை எந்திர ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி (2) விசைப் பொறி: ஏந்திரத்திற்கு இயக்க ஆற்றலை அளிக்கும் பகுதி

Motor analyzer : (தானி.) இயக்கப் பகுப்பாய்வுக் கருவி: உந்து வண்டியில் ஒரு தனிப் பெட்டியில் அல்லது ஒரு தனிச்சேணத்தில் ஒருங்கிணைத்து வைத்த கருவிகளின் ஒரு தொகுதி. இதன்மூலம் நீள் உருளை அழுத்தம், காற்று -எரிபொருள், அனல் மூட்டும் நேரம் ஆகியவற்றைச் சரிபார்க்கலாம்

motor drive : (பட் ) மின்னோடி விசை : ஓர் எந்திரத்திற்கு ஒரு மின்னோடியின் மூலம் மின் விசையளிக்கும் நவீன முறை. இது எந்திரத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும்

motor generator : (மின்.) மின்னோடி மின்னாக்கி : ஒரு மின்னாக்கியை இயக்கும் மின்னோடி. இது மாற்று மின்னோட்டத்தை நேர்_மின்னோட்டமாகவும் நேர் மின்னோட்டத்தை மாற்று மின்னோட்டமாகவும் மாற்றுவதன் மூலம் மின்னாக்கியை இயக்குகிறது

motor hoist : இயக்க உயர்த்தி; கையினாலோ விசையினாலோ இயக்கப்படும் பாரந்தூக்கிச் சாதனம்

motor jet : (வானூ) (1) மின்னோடித் தாரை : எதிரீட்டு வாயு எஞ்சின் மூலம் இயங்கும் அழுத்தியினைக் கொண்ட ஒரு தாரை எஞ்சின் (2) இத்தகைய எஞ்சின் உடைய ஒரு விமானம்

motor starter : (மின்.) மின்னோடித் தொடக்கி : தொடக்க இயக்கத்தைச் செய்வதற்காக ஒரு மினனோடியுடன் இணைக்கப்பட்டுள்ள மாற்றுத்தடைப்பெட்டி, இதில் மின்னோடியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க தடைகுறைந்து, இறுதியில் சுற்று வழியிலிருந்து முற்றிலுமாக நீங்கி விடும்

motor torque : (மின்) மின்னோடி முறுக்குப் பதக்கம் : ஒரு மின்னோடியில் சுழற்சியை அல்லது சுழலும் போக்கினை உண்டாக்கும் முயற்சி அல்லது திருகு விசை

mottled : பல் வண்ணப் புள்ளியமைவு : பல்வண்ணப் பட்டைகள் அல்லது புள்ளிகள் இட்ட அமைவு. வேண்டுமென்றே பல்வேறு வண்ணக் கோலங்களில் தயாரிக்கப்பட்ட பரப்புடைய காகிதம்