பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
439

mould: (வார்.) (1) வார்ப்படம்: உலோக வடிவங்களை உருவாக்கும் மாதிரி உரு அச்சு (2) பூஞ்சக் காளான் : (தாவ.) பழைய ரொட்டியில் வளரும் பசுமை நிறப் பூஞ்சக் காளான்

mount : ஒப்பனைச் சட்டம் : அறைகலனை வலுவாகப் பொருத்துவதற்குரிய அலங்கார ஒப்பனைச் சட்டம். இது பெரும்பாலும் உலோகத்தில் அமைந்திருக்கும்

movieola : திரைப்படத் தொகுப்பான் : திரைப்படத்தைத் தொகுப்பதற்குப் பயன்படும் ஒரு திரைப்படச் சாதனம்

moving coil: இயங்கு சுருள்; ஒரு காந்தப்புலத்தில் மின்னோட்டத்தைக் கொண்டு சொல்லும் ஒரு மின்கம்பிச் சுருளை நம்பியிருக்கும் ஒரு மின்னியல் சாதனம். எடுத்துக் காட்டு: இயங்கு சுருளுடைய ஒலி பெருக்கி

moving - coil galvangmeter : (மின்.) இயங்கு சுருள் மின்னோட்ட மானி : ஒரு நிரந்தரக் காந்தத்தினால் உருவாக்கப்பட்ட வலு வான காந்தப்புலத்தின் ஆதாரத்திலுள்ள நகரக்கூடிய சுருள்னைக் கொண்ட ஓர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின்னோட்டம் பாய்ந்தாலும் அதனைக் சுட்டிக் காட்டும்

moving needle: (மின்.) இயங்கு ஊசி மின்னோட்ட மானி : மின்னோட்டத்தைக் காட்டும் நகரும் காந்த ஊசி கொண்ட ஒரு சாதனம். இந்த ஊசியைச் சுற்றி அல்லது அதன் அருகில் சுற்றப்பட்டுள்ள நுண்ணிய கம்பிச் சுருளின் வழியே மின் விசை பாய்கிறதா என்பதைச் சுட்டிக் காட்டக்கூடியது

mucillage : தாவரப் பசை : ஒரு வகைத் தாவரப் பிசினிலிருந்தும் நீரிலிருந்தும் செய்யப்படும் தாவரப் பசைப் பொருள்

muck bar: (உலோ) கூள உலோகக் கட்டி : தேனிரும்புத் தயாரிப்பில் முழுவதும் உருகாத உலோகக் கட்டியைக் கூளங்களின் உருளை வழியே செலுத்துவார்கள். அப்போது அது "கூள்க்கட்டி' என அழைக்கப்படுகிறது. இந்த உலோகக் கட்டியில் கசடு அதிகமாகக் இருக்குமாதலால், இதனைச் சுத்திகரிக்காமல் பயன்படுத்த இயலாது

mudsil : (க.க.) சேற்றுப்படிக் கட்டை : ஒரு கட்டுமானத்தின் அடித்தளப் படிக்கட்டை. இது தரையில் நேரடியாக வைக்கப்படும்

muffle: (1) சூளை உலை : மண் பாண்ட வேலையில் சுடுவதற்காகப் பாண்டம் வைக்கப்படும் சூளை உலையறை (2) ஒலித்தடுப்பான் : ஒரு மின்னோடிப் புகைபோக்கொயின் ஓசையை அடக்குவதற்கான சாதனம்

muffle furnace: (உலோ.) பொதியுலை: மின்விசையினாலோ எரி வாயுவினாலோ இயக்கப்படும் ஒரு சிறிய உலை.உலோகங்களைக் கடும்பதப்படுத்துதல்,கடினமாக்குதல், முலாமிடுதல் போன்ற அதிக வெப்பம் தேவைப்படும் வேலை களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது

muffier :(தானி.) ஓசையடக்குச் சாதனம்: உட்புழையான நீள் உருளை கொண்ட ஒரு எந்திர சாதனம். இது ஒரு கேசோலின் எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் வழியே புறம்போக்கும் வாயு வெளியே சென்று ஒசை வராமல் அடக்கிவிடும்

mule-pulley stand: (எந்) கலப்புக் கப்பி நிலை: ஒரு துணைச்சுழல் தண்டின் மேலுள்ள தளர்வான