பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

இரு கப்பிகளை, இரு சுழல் தண்டு களுக்கிடையில் விசையினை அனுப்புவதற்கு வசதியாக அமைத்துள்ள நிலை

mullion :(க.க.) பலகணி இடைக் கம்பி: மேல் கீழான பலகணி இடைக்கம்பி

multicolour press : (அச்சு) பல வண்ண அச்சுப் பொறி : ஒரே சமயத்தில் இரண்டுக்கு மேற்பட்ட வண்ணங்களில் அச்சடிக்கவல்ல அச்சுப் பொறி

multi filament lamp : (மின்.) பல இழை விளக்கு : பெரிய வெண் சுடர் விளக்குகள் பெரும்பாலும் பல இழைகளுடன் தயாரிக்கப்படு கின்றன. இந்த இழைகள் இணையாக அமைந்திருக்கும். இதனால், ஓர் இழை எரிந்து போனாலும், விளக்குத் தொடர்ந்து எரியும்

multigraph : தட்டச்செழுத்துச் சாதனம் : கடிதங்களையும் ஆவணங்களையும் தட்டச்சு செய்த படிகள்போல் தோன்றுமாறு அச்சடிக்கவல்ல ஒரு சாதனம்

multigraph paper : தட்டச்செழுத்துக் காகிதம் : தட்டச்செழுத்துச் சாதனத்தில் பயன்படுத்து வதற்குரிய காகிதம்

multipart bearings : (எந்.) பல உறுப்புத் தாங்கிகள் : எந்திரத்தில் இருசுக் கட்டையுடன் இணைந்துள்ள மூன்று அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்ட தாங்கிகள். இவை எண்ணெய்ப் படலத்தைப் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகைத் தாங்கிகள் ஒரு பெட்டிக்குள் அடங்கியிருக்கும். கனரக எந்திரங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன

multiplane : (வானூ.) பல தட்டு விமானம் : ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆதாரத் தட்டுகளைக் கொண்ட விமானம்

multiple : பன்மடங்கு : பல் கூறு களானது; எண்ணின் பல மடங்கு; மீதமின்றி ஓர் எண்ணால் வகுக்கப் படத்தக்க தொகை

multiple disk clutch ; (தானி) பன்முக வட்ட ஊடிணைப்பி: பன்முக வட்டத் தட்டுகளைக் கொண்ட ஊடிணைப்பி. இதில் ஒரு தொகுதி இயங்குவதாகவும், இன்னொரு தொகுதி இயங்குவதாகவும் அமைந்திருக்கும். அழுத்தப்பட்ட சுருணை விற்கூருள் மூலம் அழுத்தம் கொடுக் கப்படுகிறது. ஊடிணைப்பி மிதி கட்டையை அழுத்துவதன் மூலம் ஊடிணைப்பி விடுவிக்கப்படுகிறது. இந்த ஊடிணைப்பிகள் உலர், ஊடிணைப்பி, ஈர ஊடிணைப்பி என இருவகைப்படும்

multiple drilling machine : பன் முகத் துரப்பனை எந்திரம் : ஒன்றுக் கொன்று இணையாகப் பல துரப்பணக் கதிர்கள் அமைக்கப்பட்டுள்ள ஓர் எந்திரம். இவை ஒரே சமயத்தில் இயக்கப்படும்

multiple projection welding : பன்முக வீச்சுப் பற்றவைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட பற்றாசுகளை ஒரே சமயத்தில் இயங்கச் செய்யும் முறை

multiple series : (மின்) பன்முகத்தொடர் மின்சுற்று வழி: இரண்டு அல்லது அதற்கு மேற் ப்ட்ட தொடர் மின்சுற்று வழிகளின் ஓரிணையான இணைப்பு

multiple - threaded screw : (எந்) பன்முக இழைத் திருகு : தனது உடற்பகுதியைச் சுற்றி பல திருகு சுழல் வட்டங்கள் உள்ள ஒரு திருகு இதன் மூலம் ஓரிழைத் திருகின் மூலம் கிடைக்கும் இயக்