பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

N

N.A.C.A. cowling : (வானூ.) என்.ஏ.சி.ஏ. மேல்மூடி : வானூர்தி எந்திரத்தின் ஒருவகை மேல்மூடி.இது காற்றினால் குளிர்விக்கப்படும் கதிர்களைப் போலமைந்த எஞ்சினை மூடியிருக்கும். இதில் ஒரு தலைச்சீரா அல்லது வளையம் இருக்கும். இதுவும், உடற்பகுதியின் பின்புறமுள்ள ஒரு பகுதியும், குளிர்விக்கும் காற்று தலைச் சீராவின் முன்புறம் வழியாக உட்சென்று, உடற்பகுதிக்கும் தலைச்சீராவின் பின்பகுதிக்குமிடையிலான வழவழப்பான கோண வடிவப் பள்ளத்தின் வழியே வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்

nacelle : (வானூ.) விமான எந்திர வேயுறை : பயணிகளுக்கான அல்லது மின் எந்திரத்திற்கான அடைக்கப்பட்ட காப்பிடம். இது பொதுவாக விமானத்தின் கட்டு மானச் சட்டத்தைவிடக் குறுகலாக இருக்கும். இதில் வால்பகுதி இருக்காது

nail : ஆணி : மெல்லிய உலோகத் துண்டு. இதன் ஒரு முனை கூர்மையாகவும், இன்னொரு முனை தட்டையான அல்லது உருண்டையான கொண்டையினையும் கொண்டிருக்கும். மரத் துண்டுகளையும், பிற பொருட்களையும் இணைக்க இது பயன்படுகிறது. இணைக்க வேண்டிய பொருட்களைப் பொருத்தி ஆணியின். கொண்டையில் அடித்துப் பிணைக்கலாம்

nail puller : (எந்) ஆணிக் குறடு : (1) ஆணி பிடுங்கப் பயன்படும் ஒரு கருவி. இது இருகவர்முனைகளைக் கொண்டிருக்கும். சுவர் இடை வெளியை ஆணியின் கொண்டைக்குக் கீழே கொடுத்து நெம்பி ஆணியைப் பிடுங்கலாம்

(2) இரு தாடைகள் கொண்ட ஒரு எந்திரச் சாதனம். இது மரத்தில் அறையப்பட்டுள்ள ஆணியைப் பிடுங்குவதற்கு ஒரு நெம்புகோலாகப் பயன்படுகிறது


nail set : (மர.வே.) ஆணித்தண்டு தண்டு : 10 அல்லது13செமீநீளமுள்ள ஒரு சிறிய எஃகுத் தண்டு. இதன் ஒரு முனை நுனி நோக்கிச் சிறுத்தும் ஆணியின் கொண்டை வழியேகழன்று விடாதவாறு சற்றே கிண்ண வடிவிலும் அமைந்திருக்கும். ஆணியின் கொண்டையை மேற்பரப்புக்குக் கீழே செலுத்துவதற்குப் பயன்படுகிறது

ஆணித்தண்டு

naphtha : (வேதி.) இரச கற்பூரத் தைலம் : பெட்ரோலியத்திலிருந்து கேசோலினுக்கும் பென்சீனுக்குமிடையே வடித்து இறக்கப்படும் பொருள். இது தூய்மைப்படுத்தும் பொருளாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது

naphthalene : (வேதி.) இரச கற்பூரம் : C1௦ H8 : கரி எண்ணெயில் (கீல்) கலந்திருக்கும் ஒரு கூட்டுப் பொருள். இது கரி எண்ணெயிலிருந்து வெண்படிகச் சிம்புகளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. சாயப் பொருட்கள் தயாரிப்பதாலும், நோய் நுண்ம ஒழிப்புப் பொருளாகவும்