பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

N.B. (அச்சு.) பி.கு. பின்குறிப்பு என்பதன் சுருக்கம். பின் வருவதை நன்கு கவனி என்பது பொருள்

nave : (க.க.) நடுக்கூடம் : கிறித்தவத் திருக்கோயிலின் நடுக்கூடம்

navel : (உட.) கொப்பூழ் : உந்தி; மையப்புள்ளி

navel string : (உட.) கொப்பூழ்க் கொடி

neat cement : (க.க.) தூய சிமென்ட் : மணல் கலக்காத தூய்மையான சிமென்ட் காரை

neat's foot oil : மாட்டுக் காலடி எண்ணெய் : எருது வகையைச் சேர்ந்த தூய்மையான கால்நடைகளின் காலடி மற்றும் முழந்தாள் எலும்புகளை நீரில் கொதிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் ஒரு வகை எண்ணெய். இது வெளிர் மஞ்சள் நிறமுடையது. இது தோலை மென்மைப்படுத்துவதற்கு முக்கியமாகப் பயன்படுகிறது

nebula-ae : (விண்.) ஒண்மீன் படலம் : ஒளி ஆவி போலத் தோன்றும் நீள் நெடுந்தொலைவிலுள்ள விண் மீன் குழாம்

neck : (க.க.) தூண் கழுத்து : தூணின் தலைப்பை அடுத்த கீழ்ப் பகுதி

(2) மரத்தண்டின் இடை இணைப்புப் பகுதி

necking : (க.க.) எருத்தம் : தூணின் தலைப்பகுதிக்கும் நடுத் தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி

needle bearing : ஊசித்தாங்கி : ஒரு வகை உருள் தாங்கி. இதிலுள்ள உருளிகள் ஊசிகளைப் போல் மெல்லிதாக இருக்கும்

needle point : (அ.க.) ஊசிப் பின்னல் வேலை : திரைச்சீலைகளில் கம் பளி இழைகளினால் செய்யப்படும் நுட்பமான ஊசிப் பின்னல் வேலை

ஊசிமுனை : (எந்.) எந்திரவியலில் ஊசி போல் கூர்முனையுடைய ஒரு கருவி

needle valve : (எந்.) ஊசி ஒரதர் : ஒரு குண்டூசியை அல்லது ஊசியைச் சீரமைவு செய்வதன் மூலம் திரவம் அல்லது வாயு பாய்வதை முறைப்படுத்தக்கூடிய ஒரதர். இது அடிப்பகுதியில் ஒரு சிறிய துவாரத்தில் கூம்பு வடிவப் பள்ளத்தில் பொருத்தப்பட்டிருக்கும்

negative : மறிநிலைத்தகடு : ஒளிப் படக் கலையில் ஒளியும் நிழலும் நேர்மாறாகப் பதிந்திருக்கும் ஒளிப்பட உருவப்படிவம்

negative brushes of a dynamo : (மின்.) நேர் மின்னாக்கி மறிநிலைத் தூரிகை : எதிர்மின் வாயுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னோட்ட அலைகளைத் திருப்பி விடும் கருவியின் தூரிகை

negative ion : (மின்.) எதிர்மின் அயனி : எலெக்ட்ரான்களைப் பெற்று, எதிர் மின்னூட்டம் பெற்றுள்ள ஓர் அணு

nagative carbon : (மின்.) எதிர்மின் கார்பன் : ஒரு தொடர் மின்னோட்டச் சுடர் விளக்கில் கீழ் நிலைக் கார்பன்

negative charge : (மின்.) எதிர்மின்னேற்றம் : எலெக்ட்ரான்கள் சற்று மிகுதியாகவுடைய ஒரு மின்னழுத்த நிலை

negative conductor : (மின்.) எதிர்மின் கடத்தி : எதிர் மின்வாயிலிருந்து செல்லும் ஒரு மின்கடத்தி

negative ghosts : மறிநிலை இரட்டைத் தோற்றம் : தொலைக் காட்சியில் காலந்தாழ்த்தி அனுப்பப் பட்ட அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் கறுப்பு வெள்ளைப் பகுதிகள் ஒன்றுக் கொன்று மாறி ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி