பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
447

வகைக் காகிதம். செய்தியிதழ்கள் அச்சடிக்கப் பயன்படுகிறது

news board: செய்தியிதழ்க் காகித அட்டை: செய்தியிதழ்க் காகிதக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை மலிவான காகித அட்டை

newsprint: (அச்சு) செய்தித்தாள் காகிதம்: செய்தித்தாள் அச்சிடுவதற்கான, மரக்கூழில் தயாரான தாள்

news stick: (அச்சு) செய்தி அச்சுக்கோப்புக் கட்டை: ஒரு குறிப்பிட்ட அளவுடைய அச்சுக்கோப்புக் கட்டை. பத்தி அகலத்தைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. செய்தித்தாள் பணியில் பயன்படுத்தப்படுகிறது

newton: (மின்.) நியூட்டன்: விசையின் ஓர் அலகு. இது ஒரு கிலோ கிராம் பொருண்மைக்கு, வினாடிக்கு ஒரு மீட்டர் அளவுக்கு முடுக்கம் கொடுக்கக்கூடியது

newton, issaac (1642-1727): (மின்.) நியூட்டன், ஐசக் :புகழ் பெற்றி ஆங்கில விஞ்ஞானி; கணிதமேதை; கலன கணிதத்தைக் கண்டுபிடித்தவர். புவியீர்ப்புக் கோட்பாட்டினை வகுத்தவர்

newtonian telescope: நியூட்டானியத் தொலைநோக்கி: ஒரு குழி ஆடியினால் உருவாகும் விண் மீன் உருவத்தை குழாயின் பக்க வாட்டிலுள்ள ஓர் ஆடியின் வழியாகப் பார்ப்பதற்குரிய ஒரு தொலைநோக்கி

newton's disc: (இயற்) நியூட்டன் வட்டு: இது ஒரு வட்ட வடிவத் தகடு. இதில் நிறமாலையில் வண்ணங்கள் வீத அளவுகளில் தீட்டப்பட்டிருக்கும். இந்த வட்டினை வெகு வேகமாகச் சுழற்றும் போது அதிலுள்ள வண்ணங்கள் வெண்ணிறமாகத் தோன்றும்

newton’s law of cooling : (இயற்.) நியூட்டனின் குளிர்விப்பு விதி: "ஒரு சூடான பொருள் குளிர்ச்சியடையும் வேகமானது, அந்தப் பொருள், அதைச் சுற்றியுள்ள காற்று போன்றவற்றின் வெப்பநிலைக்கு வீத அளவில் இருக்கும்" என்னும், விதி. ஒரு பொருள், காற்றைவிட 30° அதிகச் சூடாக இருக்கும் போது, அது நிமிடத்திற்கு 6°என்ற வீதத்தில் குளிர்ச்சியடையுமானால், அது காற்றைவிட 15 °அதிகச் சூடாக இருக்கும் போது, நிமிடத்திற்கு 3° என்ற வீதத்தில் குளிர்ச்சியடையும். ஒரு பொருள் அதைச் சுற்றி யுள்ள பொருள்களைவிட மிக அதிகமாகச் சூடாக இருக்குமானால்,இந்த விதி துல்லியமாக அமையாது

newton's laws of motion: (இயற்.) நியூட்டன் இயக்க விதிகள்: முதல் விதி: புறவிசைகள் எவற்றுக்கும் உட்படாதிருக்கும் போது, ஒவ்வொரு பருப்பொருளும் தொடர்ந்து அசையா நிலை யிலோ, ஒரு நேர்கோட்டில் ஒரே சீரான இயக்கத்திலோ இருந்து வரும்

இரண்டாம் விதி:ஒரு பொருளின் முறுக்கமானது (அதாவது, அதன் வேக வளர்ச்சி வீதம்), அந்தப் பொருளின் மீதான நிகர விசையினை அந்தப் பொருளின் பொருண்மையினால் வகுப்பதால் கிடைக்கும் ஈவுக்குச் சமம்

மூன்றாம் விதி: "ஒவ்வொரு வினைக்கும், அதாவது, ஒவ்வொரு இயற்பியல் விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு"

nibbler :(எந்) கொந்து கருவி: உலோகத் தகடுகளைச் சிறுகச் சிறுகக் கொந்தி விசித்திரமான வடிவங்களை உருவாக்கப் பயன்