பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

ஒட்டவைத்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் போது அரிமானம் உண்டாக்காத ஒருவகை உருகுங் கலவைப் பொருள்

nondeforming steel : (உலோ) உருத்திரியா எஃகு : 15% மாங்கனீஸ் கலந்து கடினமாக்கிய எஃகு. இது கருவிகள் செய்யவும் வார்ப்படங்கள் செய்யவும் பயன்படுகிறது

nonferrous metals : (பொறி ) அயமிலா உலோகங்கள் : இரும்பு அடங்கியிராத உலோகங்கள்

noninductive circuit' (பொறி.) தூண்டாமின் சுற்றுவழி : மின்னோட்டத்தின் காந்த விளைவு மிகக் குறைந்த அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ள அல்லது அடியோடு இல்லாமல் செய்யப்பட்டுள்ள ஒரு மின்சுற்றுவழி

noninductive'resistance: (பொறி.) தூண்டா மின்தடை: தன் தூண்டலிலிருந்து விடுபட்ட மின்தடை

noninductive Winding : (பொறி.) தூண்டாச் சுருணை : சுருளின் ஒரு பாதியில் பாயும் மின்னோட்டத்தில் ஏற்படும் காந்தப் புலம், மறுபாதியில் எதிர்திசையில் பாயும் மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்தப் புலத்தின் மூலம் செயலற்றதாக்கப்படும் வகையில் அமைக்கப்பட்ட சுருணை

nonmetallic :sheath cable (பொறி.) உலோகமிலா உறை பொதிக் கம்பிவடம் : உலோகமல்லாத ஓர் உறையில் அல்லது தறி போன்ற உறையில் பொதியப்பட்டுள்ள இரண்டு அல்லது மூன்று மின் கடத்திகளைக் கொண்ட ஒரு வகை மின்கம்பிப் பொருள்

nonpareil : (அச்சு) தனி நிலை அச்செழுத்து : அச்செழுத்தின் அளவு வகைகளில் ஒன்று. இது 6 புள்ளி அளவினைக் குறிக்கும்

non pressure : அழுத்தமிலா உருகிணைப்பு : அழுத்தம் எதுவுமின் )றிப் பற்றவைப்பதற்குரிய பற்ற வைப்பு முறைகளில் ஒன்று

nonrigid airship : (வானூ.) விறைப்பிலா வான்கலம் : வாயுப்பைகள், காற்றறைப் பைகள் போன்றவற்றிலுள்ள அக அழுத்தத்தின் மூலம் மட்டுமே வடிவம் பராமரிக்கப்படும் ஒரு வான்கலம்

nordberg key: (எந்) நார்ட்பெர்க் திறவுகோல் : சக்கரத்தின் குடத்தைச் சுழல்தண்டுடன் பிணைத்துப் பூட்டுவதற்கான வட்ட வடிவத் திறவுகோல். இது அடிக்கு 1/16" என்ற அளவில் நுனிநோக்கிச் சிறுத்திருக்கும் பெரிய விட்டம் சுழல்தண்டின் விட்டத்தில் பகுதி 6 வரை இருக்கும். பெரிய வடி வளவுகளில் இத் திறவுகோல் சூழல் தண்டின விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும். பெரிய வடிவளவுகளில், இத்திறவுகோல் சுழல் தண்டின் விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும்

normal : இயல்பளவு : நிலைநாட்டப்பட்ட சட்டம் அல்லது விதிக் கிணங்க அமைந்துள்ள நிலை (2) செங்குத்துக் கோடு : (கணி.) ஒரு வளைவுக்குச் செங்குத்தாக இருக்கும் ஒரு கோடு

normalizing : (பொறி) இயல்பாக்குதல் : எஃகினை உயர்ந்த மாறுநிலை வெப்பத்திற்குக் கூடுதலாகச் சூடாக்கி, காற்றில் குளிர் வித்தல்

normal loop: (வானூ.) இயல்புக் கரண வளைவு : விமானம் இயல்பாகப் பறக்கும் நிலைக்கு வருதல்

normal or three-point landing; இயல்பான அல்லது மும்முனைத்