பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
451

தரையிறக்கம் : தரையிறங்கும் பரப்பிற்குத் தொடுவரைபோற் செல்கிற ஒரு பாதையில் தரை யிறங்குதல். இதில் பறக்கும் வேகத்தில் ஏற்த்தாழத் தொடுங் கணத்திலேயே ஏற்படுகிறது

normal solution: (வேதி) இயல்புக் கரைசல் : ஓர் அமிலத்தின் இயல்புக் கரைசல் 1000 க.செ.மீ கரைசலுக்கு ஒரு கிராம் ஹைட்ர ஜன் அயனிகள் அடங்கியிருக்கும். எடுத்துக்காட்டுகள் 1000 க. செ. மீ. யில் 36.5 கிராம் ஹைட்ரஜன் குளோரைடு (HCL) 1000 க.செ.மீ. யில் 49 கிராம் கந்தக அமிலம் (HS<sub|2>SO<sub|4>) உற்பத்தியர்கும்,ஹைட் ரஜன் அயனிகளின் எண்ணிக்கையினால் அணு எடையை வகுப்பதன் மூலம் இந்த மதிப்புக் கிடைக் கிறது. ஓர் உப்பு மூலத்தின் இயல்புக் கரைசலில் 1000 க.செ.மீ. யில் 17. கிராம் ஹைட்ராக்சில் அயனிகள் அடங்கியிருக்கும் எடுத்துக் காட்டு 1000 க.செ.மீ.யில் 40 கிராம்சோடியம் ஹைட்ராக்சைடு

normal spin: (வானூ.) இயல்பு சுழற்சி : விமானம் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்மா றாக இயல்பான நிலையிலிருந்து சுழன்று கொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம், இதனைக் "கட்டுப்படுத்திய சுழற்சி என்றும் அழைப்பர்

norman : (க.க.) நார்மானிய கட்டிடக் கலை : நார்மானியர் இங்கிலாந்தை வெற்றி கொண்ட பின்னர் இங்கிலாந்தில் உயர் நிலையை எட்டிய நார்மானிய பாணிக் கட்டிடக் கலை

north pole : (மின்) வடதுருவம்; காந்த ஊசியின் வடமுனை காட்டும் வடதிசைப் பகுதி

nose : (பட்.) அலகு : ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றின் கூர்மையான அலகுப் பகுதி கடைசல் எந்திரத்தின் திருகிழைமுனை, துளையிடு எந்திரத்தின் கதிர், துரப்பணத்தின் கூர் அலகு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு

nose cone : (விண்.) மூக்குக் கூம்பு: விண் வெளிக்கலம் பறக் )கும்போது காற்றுத் துகள்களுடன் உராய்வதால் உண்டாகும் உயர் வெப்ப நிலையைத் தாங்கும் வகையில் அந்தக் கலத்தின் மூக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவக் காப்புக் கவசம்

nose - down : (வானூ.) கீழ்நோக்கிப் பாய்தல் : பறக்கும் விமானத்தின் கூம்புப் பகுதியைக் கீழ் நோக்கிப் பாயும்படி செய்தல்

nose heavy : (வானூ.) கூம்பு இறக்கம் : விமானம் இயல்பாகப் பறக்கும்போது, அதன்_கூம்புப்பகுதி கீழ் நோக்கி இறங்கும் போக்கு

nose - over : (வானூ) கூம்பு ஏற்றம் : விமானம் தரையிறங்கும் போது அதன் கூம்புப் பகுதி தற்செயலாக மேல் நோக்கித் திரும்புவதைக் குறிக்கும் சொல்

nose-up : (வானூ.) கூம்பு உயர்வு: பறக்கும் விமானத்தின் கூம்புப் பகுதியை உயர்த்துதல்

nose wheel : (வானூ) கூம்புச் சக்கரம் : விமானத்தின் கூம்புப் பகுதியினைத் தாங்குவதற்காக முதன்மைச் சக்கரங்களுக்கு முன்னே அமைக்கப்பட்டுள்ள, திசையறிந்து திருப்பத் தக்க சக்கரம்

nosing : (க.க.) படி வரிசை : படி வரிசை விளிம்பின் உலோக முகப்பு

notation: குறிமான முறை :குறியீடுகள், சைகைகள். உருவங்கள். எழுத்துகள் போன்றவற்றால் செய்திகளைத் தெரிவிக்கும் முறை