பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

454

O

oak : (மர.வே.) கருவாலி : பல நோக்கங்களுக்குப் பயன்படும் மரம். இது கடினமானது; நீண்ட நாள் உழைக்கக்கூடியது; வலிமை மிகுந்தது; தட்பவெப்ப மாறுபாடுகளைத் தாங்கக்கூடியது. அறைகலன்கள் தயாரிக்கவும். தளமிடுவதற்கும், உருச்செப்பமிடுவதற்கும் பயன்படுகிறது

oak, red : (தாவ.) செங்கருவாலி : கரடுமுரடான பரப்புடைய, கடினமான, நீண்டகாலம் உழைக்கக் கூடிய மரம். செம்பழுப்பு நிறத்தில் கவர்ச்சியான கரணைகள் உடையது. இதில் வேலைப்பாடுகள் செய்வது கடினமாக இருக்கும்

oak, white : (தாவ.) வெண்கருவாலி : அமெரிக்காவில் மிகுதியாக வளரும் விலைமதிப்பு மிக்க வெட்டு மரம். இது இளம்பழுப்பு நிறத்தில், நெருக்கமான கரணைகள் உடையதாக இருக்கும்

oakum : (கம்மி.) பழங்கயிற்றுச் சிலும்பு : பழங்கயிறுகளைப் பிய்த்துச் சிலும்புவாகச் செய்து கலப்பற்றாகப் பயன்படுத்துவதற்கான பழங்கயிற்றுச் சிதைவு

obelisk : (க.க.) சதுரத் தூபி : நான்முகக் கூர்நுனிக் கம்ப வடிவமைந்த மரம்

oblique projection : சாய்வுத் தளப் படிவாக்கம் : ஒரு பொருளின் முகம் பார்ப்பவருக்கு இணையாக வரும் வகையில் அமைக்கும் முறை. இதில் இந்த முன் முகத்திற்குச் செங்குத்தாகவுள்ள முகங்கள், முன் முகத்தின் அதே கோணத்திற்கும் அளவு கோலுக்கும் வரையப்படுகிறது

oblong : (கணி.) நீள் சதுரம் : உயரத்தைவிடக் குறுக்கு அகலம் மிகுதியாகவுடைய உருவம்

obscuration : (வண்.) மங்கலாக்குதல் : ஒரு வண்ணத்தின் அல்லது இனாமலின் மலைப்புத் திறன். ஒளி ஊடுருவாத வண்ணப் பொருளின் மறைப்பு ஆற்றல்

obsidian : (கனிம.) எரிமலைப் பாறை : எரிமலைக் கரும் பளிக்குப் பாறை. இது மிகவும் கடினமான பளபளப்பானது

obstruction light : (வானூ.) தடை விளக்கு : விமானங்கள் பறப்பதற்கு ஆபத்தான உயரத்தைக் குறித்துக் காட்டுவதற்கென வடிவமைக்கப்பட்ட சிவப்பு விளக்கு

obtuse : (கணி.) விரிகோணம் : கூர் விளிம்பற்ற கோணம். இரு செங்கோணத்திற்குக் குறைந்து ஒரு செங்கோணத்திற்குப் பெரிதான கோணம்

obverse : முகப்புப் பக்கம் : நாணயம், பதக்கம் ஆகியவற்றில் முகப்புப் பக்கம். பின்புறத்திற்கு நேர் எதிரான முன்புறம்

occasional furniture : துணை அறைகலன் : பல்வேறு வடிவுகளிலுள்ள பல்வேறு பயன்பாடுகளுக்கான சிறிய அறைகலன். இக் காலத்தில் வரவேற்பு அறை. பகல் நேர அறை போன்றவற்றிலுள்ள அறைகலன்கள்

occultation : (வண்.) கோள மறைவு : ஒரு வான்கோளம், இன்னொரு பெரிய கோளத்திற்குப் பின்னால் மறைதல்