பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
455

ocher : (வண்.) மஞ்சட்காவி : சதுப்பு நிலங்களில் இரும்பும் சுண்ணாம்பும் கலந்து நீரில் உண்டாகும் மஞ்சட்காலி மண். இதனை நேர்த்தியான தூளாகச் செய்து ஆளிவிதை எண்ணையுடன் கலந்து வண்ணச் சாயம் தயாரிக்கப்படுகிறது

octagon : எண்கோணம் : எட்டுப்பக்கங்களும் எட்டுக் கோணங்களும் உடைய ஒரு சமதள உருவம்

octane rating : வெடிப்பு வீதம் : கேசோலின் வெடியெதிர்ப்புத் திறனளவு ஐசோஆக்டேன் மிகக் குறைந்த அளவு வெடிப்பு உண்டாக்கக் கூடியது; அதன் வீதம் 100. இயல்பான ஹேப்டேன் மிக அதிக அளவு வெடிப்பு உண்டாக்கும்; அதன் வீதம் 0. இவை இரண்டையும் சரி பாதி கலந்த கலவை 50 வெடிப்பு வீதம் உண்டாக்கும்

octane selector : (தானி.) நீர்க் கரிமத் தொடர்மத் தேர்வு முறை : பல்வேறு தரமுடைய கோசோலினிலிருந்து மிக உயர்ந்த அளவு திறம் பாட்டினைப் பெறுவதற்காக நேரத்தைச் சரியமைவு செய்வதற்கான ஒருமுறை

octant : (வானூ.) எண்ம வட்டமானி : வானியலிலும் கடற்பயணத்திலும் பயன்படுத்தப்படும் அரைக்கால் வளாகம் 90° வரையில் கோண அளவுகளில் இருக்கும். இதன் செயற்கை வான்விளிம்பு குமிழில் வடிவில் இருக்கும்

actopod : (உயி..) எண்காலிகள் : வாய்முகப்பைச் சுற்றிலும்எட்டு கிளையுறுப்பு களையுடைய அஞ்சத்தக்க கடல் விலங்கினம்

எண்காலிகள்

odd I e g caliper : (எந்.) இணையிலாக்கால் விட்டமானி : மிதமான அளவில் விளைந்தகால்களை யுடைய விட்டமானி. இதில் இரு கால்களும் ஒரே திசையில் விளைந்திருக்கும். இது தலையடிப் பகுதித் தொலைவுகளை அளவிடுவதற்குப் பயன்படுகிறது

odeum : (க.க.) இசையரங்கு : பண்டையக் கிரேக்க ரோமானியர்களிடையே இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்கு. இக்காலத்தில் ஒரு மண்டபம்; நீண்ட அறைக்கூடம்

odometer : தொலைவு மானி : பயணஞ் செய்த தொலைவினை ஆள விடுவதற்கான ஒரு சாதனம். இது சக்கரத்தின் குடத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்

odontograph : (எந்.) பல்லிணை ஆர அட்டவணை : பல்லிணைப் பற்களின் உருவரைகளை அமைப்பதற்கான ஆரங்களின் அட்டவணை

O.D. pipe : (பொறி.) புறவிட்டக் குழாய் : கொதிகலன் குழாய்களின் பெயரளவிலான வடிவளவுகளைக் குறிக்கும். 12' விட்டத்திற்கு அதிகமான மென்குழாய்களையும் குறிக்கிறது

Oersted, Hans Christian (1777-1851) : (மின்.) ஒயர்ஸ்டெட், ஹான் கிறிஸ்டியன் : டென்மார்க்கைச் சேர்ந்த விஞ்ஞானி. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே ஆசிரியரானார். மின் விசைக்கும் காந்த விசைக்குமிடையிலான தொடர்பைக் கண்டுபிடித்தவர். ஆய்வுக்கூடப் பரிசோதனைகளின்போது, மின்னோட்டத்தைக் கொண்டு செல்லும் ஒரு கடத்தியைச் சுற்றி ஒரு காந்தப் புலம் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்தார்

oersted : (மின்.) ஒயர்ட்ஸ்டெட் : காந்தப்புலத்தின் செறிவினைக் குறிக்கும் திட்ட அலகு