பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
457

செறிவூட்டிய காகிதத்தை மின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய பொருளாகப் பயன்படுத்தும் மின் னியல் உறைகலம்

oil control ring: (தானி.) எண்ணெய்க் கட்டுப்பாடு வளையம்: இது ஒரு வகை உந்து தண்டு வளைய்ம். இந்த வளையத்திலுள்ள வரிப்பள்ளத்தின் வழியாகவும், உந்து தண்டின் சுவரிலுள்ள சிறிய துவாரங்கள் வழியாகச் செல்லும் எண்ணெய் நீள் உருளைச் சுவரிலிருந்து பிறாண்டி எடுத்து திருகு கோட்டக் கலத்தினுள் வடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது

oil cup: (எந்) எண்ணெய்க் குவளை: இது உட்புழையான கண்ணாடி மேற்பகுதியையும், தகடு களாலான அடிப்பகுதியையும் கொண்டது. இதனை திருகிழைகள் மூலம் ஒரு தாங்கியுடன் இணைந்து, தேவையான போது எண்ணெய் இடைவிடாமலும் ஒரே சீராகவும் சொட்டுவதற்கு அனுமதிக்குமாறு செய்யப்படுகிறது

oiler: எண்ணெய்க்கலம்: சிறிய வடிவளவிலுள்ள எண்ணெய்க் கலம்

oil filters (தானி) எண்ணெய் வடிகட்டி: வடிகட்டும் பொருளுடைய நீள் உருளை. இது, இயக்கு பொறி ஓடிக்கொண்டிருக்கும் போது, மசகு எண்ணெய் இடை விடாமல் வடிகட்டி வழியாகச் செல்லுமாறு செய்து துகள்களையும், அயல் பொருள்களையும் அகற்றும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும். இந்த வடிகட்டும் அமைவு 12872கி.மீ. தொலைவுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்

oil gauge; (தானி) எண்ணெய் அளவுமானி: இந்த அளவுமானிகளில் இருவகை உண்டு. ஒன்று கொள்கலத்திலுள்ள எண்ணெயின் அளவினைக் குறிக்கப் பயன்படுகிறது. மற்றொன்று பாயும் எண்ணெய் அழுத்த அளவுமானி. பொதுவாக கருவிப் பலகைமீது பொருத்தப்பட்டிருக்கும். அளவு குறிக்கப்பட்ட ஒரு வட்டிகையில் இது இந்த அளவுகளைக் காட்டும்

oil grinder: எண்ணெய்ச் சாணை: கூர்மையான கருவிகளைச் சாணை தீட்டுவதற்குப் பயன்படும், விசையினால் இயங்கும், ஒரு வகைச் சாணைக்கருவி

oil groove: (எந்) எண்ணெய்த் துளை: ஓர் எந்திரத்தின் பித்தளை உள்முகத்திலும், அதன் சறுக்குப் பரப்பிலும் வெட்டப்பட்டுள்ள வரிப்பள்ளம். இது மசகிடுவதற்காக எண்ணெயை வழங்குவதற்குப் பயன்படுகிறது

oil hardening: (எந்) எண்ணெய் இறுக்கம்: எஃகினை நீருக்குப் பதிலாக எண்ணெயில் ஊறவைத்துக் கெட்டியாக்குதல்

oil hole: (எந்.) எண்ணெய்த் துளை: மசக்கெண்ணெய் ஊற்றுவதற்குரிய எந்திரத்துளை

oil-hole drills: (உலோ.வே.) எண்ணெய்த் துளைத் துரப்பணம்: எந்திரத் தண்டிலிருந்து வெட்டு முனை வரைச் செல்லும் ஒன்று அல்லது இரண்டு துளைகளையுடைய துரப்பணம். ஆழமான துளைகளைத் துரப்பணம் செய்வதற்கு இது முக்கியமாகப் பயன்படுகிறது

oilless-type bearings: (தானி) எண்ணெயிலாத் தாங்கிகள்: (1) நீண்ட இடைவெளிகளுக்குப் பின்னரே எண்ணெயிடுதல் தேவைப்படும் தாங்கிகள், இவை எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும் நுண்