பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
461

ormolu: பளபளப்பு வெண்கலம் : தட்டு முட்டுச் சாமான்களை அணி செய்யப் பயன்படும் பளபளப்பான வெண்கலம்

ornament : அணி வேலைப்பாடு : அணி ஒப்பனை செய்யப் பயன்படும் அழகு வேலைப்பாடு

ornithopter : (வானூ) Aஆர்னித்தோப்டர்: ஒருவகை விமானம். இது காற்றைவிடக் கனமானது. படபட என்று அடிக்கும் சிறகுகள் உடையது

orometer : ஒரோ மானி : கடல் மட்டத்திற்குமேல் உயரங்களைப் பதிவு செய்யக்கூடிய அனிராய்டு பாரமானி

orthographic : புடை போவியக் கலை : நிலப்படங்களில் உயர்ச்சி யூட்டும் தொலைத் தோற்ற முறை

orthographic projection : தொலைத் தோற்ற முறை : நிலப்படங்களில் உயர்ச்சியூட்டும் தொலைத்தோற்றமுறை, இதில் முகப்புத் தோற்றம், மேல்முகத் தோற்றம், வலப்பக்க தோற்றம் முதலியவற்றைக் காட்டலாம்

orthoptera ; (உயி) அடுக்குச் சிறகிகள்: நேரான குறுகிய முன் சிறகுகள் கொண்ட வண்டு இனம். இவற்றின் முதல் இணைச் சிறகுகள் கனமாகவும், இரண்டாம் அடுக்குச் சிறகுகள் சவ்வு போன்றும் அமைந்திருக்கும்

ortho style: (க.க) நேர் வரிசை தூண்: நேர்கோட்டில் தூண்களை அமைக்கும் முறை

oscillation: (க.க.) ஊசலாட்டம் : ஓர் ஊசலைப்போல் முன்னும் பின்னுமாக ஊசலாடுதல் இருமுனைகளுக்கிடையே இங்குமங்குமாக அசைதல்

oscillator : அலைவி : மாறு மின் னோட்டம் உண்டாக்குவதற்குப் பயன்படும் உயர் அலைவெண் உள்ள ஒரு மின் சுற்றுவழி

osciliograph : (மின்) அலைவு பதிப்பி : தங்கப் பேனாக்களின் முள் நுனிகளிலும், அரிமானத்தை எதிர்க்கும் உலோகக் கலவைகள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படும் ஒரு கருவி

oscillograph, oscilloscope : (இயற்.) அலை அளவுமானி: அலைகளை ஒளிப்படச் சுருளில் பதிவு செய்யக் கூடிய ஒரு கருவி. ஓர் எதிர்மின் முனைக் கதிர்க் குழலை இதற்குப் பயன்படுத்தலாம்

osmium : (உலோ) ஆஸ்மியம்: வெண்மக் குழுவினைச் சேர்ந்த, எடையில் எல்லாப் பொருட்களையும் விஞ்சிய அரிய உலோக வகை. இது அரிமானத்தை எதிர்க்கக் கூடியது

osmosis (இயற்.) ஊடு கலப்பு : துளைகள் உள்ள இடைத்தடுப்புக்கள் வழியாகத் திரவங்கள் தம்முள் கலந்திடும் தன்மை

osophone : (மின்) செவிடர் தொலைபேசி : செவிப்புலன் குறைந்தவர்கள் கேட்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தொலைபேசி. இதில், ஒலி அதிர்வுகள் நேரடியாகத் தலை எலும்புகளை அடைகின்றன

ottoman : சாய்மான இருக்கை : சாய்மானம் கைகள் இல்லாத மெத்தையிட்டுத் தைத்த மெத்தை. இது முதலில் துருக்கியில் பயன்படுத்தப்பட்டது என்பர்

outboard motor : புறப்பொறி: கப்பலுக்கு அல்லது. படகுக்கு வெளிப்புறத்தில் அமைக்கப் பெற்றுள்ள ஒரு பெட்ரோல் எஞ்சின். இதனை சிறிய படகுகளின் பின்