பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

462

புறத்தில் வேண்டும் போது பொருத்தி, வேண்டாத போது கழற்றி எடுத்துக் கொள்ளலாம். மிகவேகமாக ஓடும் பந்தயப்படகுகளில் இது பயன்படுத்தப்படுகிறது

outlet : (மின்.) மின் வடிகால் : மின்கம்பி அமைப்பில் எந்த ஒரு புள்ளியிலிருந்தும் நுகர்வுக்கு மின் விசையை எடுக்கலாம். அவ்வாறு மின் விசை எடுக்கப்படும் புள்ளியை மின் வடிகால் என்பர்

outlet box : (மின்.) மின் வடிகால் பெட்டி : மின் கம்பிக் காப்புக் குழாய் அமைப்பில் செருகப்பட்டுள்ள ஓர் இரும்புப் பெட்டி. இதிலிருந்து விளக்கு போன்ற ஒரு சீர்தனத்திற்கு மின் விசையை எடுக்கலாம்

outlined halftone : (அச்சு) திண்ணிழல் உருப்படிவம்: இது ஒரு நுண் பதிவுப் படம். இதிலிருந்து ஓர் உருவத்தின் எந்தப் பகுதியையும் சுற்றியுள்ள திரையை வெட்டி எடுக்கலாம்

outlining : உருவரை: (1) முக்கியக் கோடுகளை மட்டும் காட்டி வரைந்த திருந்தா உருவம் (2) முக்கியக் கூறுகளை மட்டும் விவரித்துக் கூறுதல் (3) உருமாதிரி வரைதல

out of gear : (எந்) செயற்படா நிலை : வழக்கமாகப் பிணைந்திருக்கும் பல்லிணைச் சக்கரங்களின் பற்கள் பிணையாமலிருக்கும் போது அல்லது எந்திரத்தின் இயக்கியின் தொடர்பு நீக்கப்படும்போது, அவை செயற்படா நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது

out of phase : (மின்) இயங்காப் படி நிலை: மாற்று மின்னோட்டத்தில் ஒரே சமயததில் பெரும், குறும அளவுக்கு மின்னோட்டம் பாயாமலிருக்கும் நிலை

out-put : (மின்.எந்) எடுப்பு அளவு : மின்னாக்க ஆதாரத்திலிருந்து ஒரு புறச்சாதனத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்படும் மின் விசையின் அளவு

output device: (மின்) மின் வெளிப்பாட்டுச் சாதனம் : ஒரு கணிப் பொறியியல் சிக்கல்களுக்கான தீர்வுகளை இறுதியாகப் பதிவு செய்து கொடுக்கும் கருவி. இது மிக விரைவாக வாசித்தறியும் சாதனமாகவோ அட்டைத் துளையிடு கருவியாகவோ, தட்டச்சுப் பொறியாகவோ ஒலிப்பதிவுக் கருவியாகவோ இருக்கலாம்

output meter : (மின்) மின் வெளிப்பாட்டு மானி : ஒரு மின் சுற்று வழியின் மின் வெளிப்பாட்டுச் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ள அளவு கருவி. இது வாட், வோல்ட் அளவுகளின் மின்னழுத்தத்தைக் காட்டும்

output stage (மின்) வெளிப்பாட்டு நிலை: ஒரு மின்னணுவியல் சுற்றுவழியில் இறுதி நிலை, பொதுவாக இது ஒரு விசைப் பெருக்கியாக இருக்கும். இது வெளிப்பாட்டுச் சாதனத்தை இயக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஓர் ஒலிபெருக்கி அமைப்பில் இறுதி விசைப் பெருக்க நிலையில், ஒலி பெருக்கி இயக்கப்படுகிறது

output transformer: - (மின்) வெளிப்பாட்டு மின்மாற்றி : இது ஒரு மின்மறிப்பு பிணைப்பு மின்மாற்றி. இது இறுதிநிலை வெளிப்பாட்டு மின்மறிப்பினை ஒலி பெருக்கி போன்ற இயல் மாற்றி மின்மறிப்புக்கு இணையாகும்படி செய்கிறது

outside caliper : (பட்) புற விட்ட மானி: புற அளவுகளை அல்லது வடிவளவுகளை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும்விட்டமானி