பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

464

பட்டிருக்கும். இந்த அமைப்பின் மூலம் உள்வளையம் புறவளையத்தை உந்தித் தள்ளும். புறவளையம் உள்வளையத்தைவிட வேகமாக இயங்குமானால், அது உள் வளையத்தை விஞ்சியோடும்

over-shoot : (வானு) இலக்கு கடத்தல்: விமானம் தரையிறங்கும் போது குறி இலக்குகளைக் கடந்து தவறாகப் பறத்தல்

over time : மிகை நேரம் : குறித்த வேலை நேரத்திற்கு மிகுதியாக வேலை செய்யும் நேரம்

ovolo : (க.க) கால்வட்டச் சித்திர வேலை : கால் வட்டவளை பகுதியுடைய சித்திர வேலைப்பாடு

oxalic acid : (வேதி.) ஆக்சாலிக் அமிலம் : நச்சுத் தன்மை வாய்ந்த அமிலம். மரத்தூள், கடுங்காரச் சோடா, கடுங்காரப் பொட்டாஷ் ஆகியவற்றின் கலவையிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இது சலவை. சாயமிடுதல், காலிக்கோ அச்சு ஆகியவற்றில் முக்கியமாகப் பயன்படுகிறது

oxidant : (விண்) ஆக்சிகரணி : ராக்கெட்டில் செலுத்து பொருளாகப் பயன்படுத்தப் படும் திரவ ஆக்சிஜன், நைட்ரிக் அமிலம் போன்ற் எரிபொருளை எரித்து ஆக்சிஜன் கொடுக்கும் பொருள்கள்

oxidation : (வேதி) ஆக்சி கரணம் : ஒரு பொருளை வேதியியல் முறைப்படி ஆக்சிஜனுடன் ஒருங்கிணையும்படி செய்தல்

oxide : (வேதி) ஆக்சைடு: தனிமம் அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் ஆக்சிஜன் இணைந்த வேதியியற் பொருள்

oxidizing : ; ஆக்சிஜனேற்றுதல் : ஓர் அமிலக்கரைசல் மூலம் ஆக்சிஜனேற்றி ஓர் உலோக வேலைப் பாட்டுக்கு மெருகேற்றுதல்

oxidizing agent :(வேதி.) ஆக்சிஜனேற்று பொருள் : ஒரு பொருள் தன்னிடமிருக்கும் ஆக்சிஜனில் ஒரு பகுதியை உதறிவிட்டு இன்னொரு பொருளை ஓர் ஆக்சைடாகவோ வேறு கூட்டுப் பொருளாகவோ மாறறுகிறது. இந்தப் பொருள் ஆக்சிஜனேற்று பொருள் எனப்படும்

oxidizing flame: ஆக்சிஜனேற்றுச் சுடர் : ஒரு வாயுப் பற்றவைப்புச் சுடர், இதில் முழுமையான உள்ளெரிதலுக்குத் தேவையான அளவைவிட அதிகமாக ஆக்சிஜன் அமைந்திருக்கும்

oxvacetylene : (பொறி ) ஆக்சி அசிட்டிலின் : மிகவும் சூடான சுடரை உண்டாக்கும் வகையிலான விகிதங்களில் ஆக்சிஜனும் அசிட்டிலினும் கலந்துள்ள ஒரு கலவை. உலோகவேலைத் தொழிலில் பற்ற வைப்பதற்கும், வெட்டுவதற்கும் இந்த வாயு பயன்படுகிறது

oxygen : (வேதி.) ஆக்சிஜன்: சுவையற்ற, நிறமற்ற வாயுத் தனிமம். காற்றின் கன அளவில் ஐந்தில் ஒரு பகுதி ஆக்சிஜன். இது எரிவதை ஊக்குவிக்கிறது. உயிர்கள் உயிர்வாழ் இன்றியமையாத வாயு. இதனால் இதனை 'உயிரகம்' என்று கூறுவர்

oxygen - acetylene cutting : (பற்.) ஆக்சிஜன் - அசிட்டிலின் வெட்டு : ஆக்சிஜன் அசிட்டிலின் சேர்க்கப்பட்டுள்ள ஆக்சிஜன் தாரையைப் பயன்படுத்தி உலோகங்களை வெட்டுதல்

oxygen - acetylene welding : (பற்.,) ஆக்சிஜன் அசிட்டிலின் பற்ற வைப்பு : ஆக்சிஜன், அசிட்டிலின் ஆகிய இருவாயுக்களும் இணைந்த ஓர் எரிப்பொருளைப் பயன்படுத்திப் பற்றவைப்பு செய்யும் முறை