பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
465

oxygen cylinder : (பற்) ஆக்சிஜன் நீள் உருளை: ஒரு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜனைச் சேமித்து வைக்கவும், கப்பல்களில் கொண்டு செல்லவும் பயன்படும் தனிவகைக் கொள்கலம்

oxyen-hydrogen flame : (பற்) ஆக்சிஜன்-ஹைட்ரஜன் சுடர் : ஆக்சிஜன், ஹைட்ரஜன் எரிவாயுவுடன் இணையும் போது ஏற்படும் சுடர்

oxygen-LP gas flame : (பற்) ஆக்சிஜன்-எரிவாயுச் சுடர் : ஆக்சி ஜன், எரிவாயுவுட்ன் (திரவமாக்கிய பெட்ரோலியம்) வேதியியல் முறையில் இணைந்து உண்டாகும் சுடர்

oxygen regulator : (பற்) ஆக்சிஜன் ஒழுங்கியக்கி : நீர் உருளை அழுத்தங்களை வேண்டிய அளவுக்குக் குறைக்கவும், அழுத்தத்தை நிலையாக வைத்திருக்கவும் பயன்படும் ஒரு தானியங்கி ஓரதர்

ozocerite : (வேதி) மெழுகு அரக்கு : மெழுகுதிரி, மின்காப்பு ஆகியவற்றில் பயன்படும் மெழுகு போன்ற புதைபடிவ அரக்குப் பொருள். கரையாத பிசின் செய்யப் பயன்படுகிறது

ozone : (வேதி.) ஓசோன் : கார நெடி கொண்ட நிறமற்றவாயு (O3). சலவை எண்ணெய்கள், மெழுகுகள், மாவு, மரப்பொருள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சில சமயம் குடிநீரைக் கிருமி நீக்கம் செய்வதற்கும் பயன்படுகிறது. ஒரு தனிவகைச் சாதனத்திலுள்ள உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றின் வழியே உயர் அழுத்த மின்விசையைச் செலுத்துவதன் மூலம் இந்த வாயு தயாரிக்கப்படுகிறது

ozone : (குளி.பத.) ஓசோன் : மூன்று அணுவுடைய ஆக்சிஜன் காற்றைத் துய்மைப் படுத்துவதற்குப் பயன்படுகிறது

ozonospher : (விண்) ஓசோன் மண்டலம் : வாயு மண்டலத்தின் மேற்படுகையில் சுமார் 65கி.மீ. உயரத்தில் மிக அதிக அளவு ஓசோன் செறிவுள்ள மண்டலம்