பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

காற்று நீக்கப்பட்ட வெற்றுக் குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்னோடி

anodise : (உலோ.) முலாம்பூசுதல்: மின்பகுப்பாய்வு மூலம் அலுமினியத்திற்கு அலுமினியம் ஆக்சைடு முலாம் பூசுதல். இதில் குரோமிக் அமிலம் அல்லது கந்தக அமிலம் திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்திரவத்திலிருந்து ஆக்சிஜனை மின்னோட்டம் விடுவித்து, அலுமினியம் ஆக்சைடு ஒரு படலமாக உலோகத்தின்மீது படிகிறது. இந்தப் படலம் உலோகத்தைப் பாதுகாக்கிறது. இந்தப் படலத்திற்குப் பல்வேறு வண்ணங்களில் சாயமேற்றலாம்

anopheles : (நோயி.) மலேரியாக் கொசு : மலேரியாக் காய்ச்சலை உண்டாக்கும் ஒருவகைக் கொசு

anorexia : பசியின்மை ; உணவு உண்பதில் அவா இல்லாமலிருத்தல

anoxia : (உட.) ஆக்சிஜன் குறைபாடு: இரத்தத்தில் அல்லது திசுக்களில் ஆக்சிஜன் போதிய அளவு இல்லாதிருத்தல்

anta : (க.க.) கவர்ப்பட்டிகைக் கல் : வாயிலருகே அல்லது மூலை ஒரமாகச் சுவரில் குறுக்காகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பட்டி கைக்கல்

ante fix : (க.க.) முன்னிலைக் கட்டு : அடித்தள எழுதகங்களின் மூலைகளில் பொருத்தப்பட்டுள்ள நிலைக்குத்தான அலங்கார வேலைப்பாடு

antenna (மின்) வானலை வங்கி : கம்பியில்லாத் தந்தியில் வானலைகளை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு

antenna efficiency : (மின்.) விண்ணித் திறன்: ஒரு கிலோவாட் ஆற்றலுள்ள ஒரு விண்ணியினால் தரைவழியே 1.6 கி.மீ. நீளத்திற்க்கு உண்டாக்கப்படும் தள வலிமை). இது ஒரு தரத்திட்ட விண்ணியின் கள வலிமையிலிருந்து வேறுபட்டது

antenna: (வானொலி, தொலைக்காட்சி.)வானலை வாங்கி/விண்ணி) வானலைக் கொடி: கம்பியில்லாத் தந்தியில் வானலையினை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு

antenna gain: (மின்.) விண்ணிப் பெருக்கம் : விண்ணி மின்னோட்த்தின் வர்க்கத்தினால் பெருக்கப்பட்ட விண்ணித் தடை

antennas : (வின்.) விண்ணிகள்: ஒர் உத்தரத்தின் நெடுகிலும் இடைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு, அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கம்பிகளினாலான விண்ணி. கதிர்வீசியாக இல்லாத கம்பிகள் பிரதிபலிப்பான்களும் இயக்கிகளும் ஆகும். இந்த விண்ணி, திசை காட்டுந்தன்மையது; இதில் சுழல்வதற்கான ஒர் அமைவு உள்ளது

anthemion : (க.க.) சித்திரபடிவம் : பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி_வசைகளில் பனையோலைப் பாணியிலமைந்த கிரேக்க அலங்கார வடிவமைப்பு

anthracene : (வேதி.) ஆந்திரசீன் : கீலிலிருந்து வடித்தெடுக்கப்படும் சாய மூலப்பொருள் சாயப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

anthracite : (கனி.) மட்கரி: நிலக்கீல் சத்தில்லாத நிலக்கரி படிக வடிவ உலோகத் தனிமம். இதனைக் கடின நிலக்கரி என்றும் கூறுவர். இதன் குறியீடு Sb, வெள்ளியத்துடன் அல்லது ஈயத்துடன்