பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

செரிமானத்திற்கேற்ற நீர் சுரக்கும், இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி

panel board: (மின்.) விசைப் பலகை: மின்விசைகளும், உருகு கம்பிகளும் உடைய ஒரு கட்டுப்பாட்டுப் பலகை

pantile: (க.க.) வளைகூரை ஓடு: எழுதக வளைவான குறுக்கு வெட்டுட்ன் கூடிய கூரை ஓடு; குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு

pantograph: படப்படியெடுப்பான்: வரைபடங்களை பெரிதாக்கிய அளவிலோ, சுருங்கிய அளவிலோ படியெடுக்கப் பயன்படும் ஒரு சாதனம்

pantometer: (கணி.) கோணமானி:கோணங்கள், உயரங்கள் முதலியவற்றை அளவிடுவதற்கான ஒரு சாதனம்

paper: வரைதாள்: படங்கள் வரைவதற்குப் பயன்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தாள். இரண்டும் தட்டைத் தகடுகளாகவும் சுருள்களாக இருக்கும். நல்ல வரை தாள் முரடாகவும், பென் சிலையும் மையையும் ஏற்கக் கூடியதாகவும், அழித்துத் திருத்த இடமளிப்பதாகவும் இருக்க வேண்டும். இதற்குப் பொதுவாக கையினால் செய்யப்படும் காகிதம் பொருத்தமாக இருக்கும்

paper birch: காகிதப் பிரம்பு மரம்: இதனை வெண்பிரம்பு மரம் என்றும் அழைப்பர். இது 15மீ. முதல் 23மீ. அடிவரைவளரும். மரம் வலுவானது: கடினமானது. இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். காகிதக்கூழ் தயாரிக்க முக்கியமாகப் பயன்படுகிறது

paper condenser: (மின்.) காகிதத் செறிவுறுத்து சாதனம்: ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காகிதத்தினாலான மின்தடைப் பொருள் கொண்ட கெட்டிப்படுத்தும் சாதனம்

paper cutter: (அச்சு.) காகித வெட்டி: காகிதத்தை வேண்டிய வடிவளவுகளில் பயன்படும் ஒர் எந்திரம். இதனை கையினாலோ விசையினாலோ இயக்கலாம்

paper drill: (அச்சு.) காகிதத் துளைக்கருவி:அடுக்கிய காகிதங்களில் துளையிடுவதற்குப் பயன்படும் கருவி

paper machine: காகித எந்திரம்: காகிதத்தை வடிவமைக்கவும். அழுத்தவும், உலர்த்தவும், மெரு கூட்டவும். சுருளகளாக சுருட்டவும், தகட்டுத் தாள்களாக வெட்டவும் பயன்படும் எந்திரம்

papier machine:தாள்கூழ்:பல் வேறு வடிவங்களில் காகிதங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் காகிதக்கூழ்

parabola (பொறி;கணி.) மாலை வளைவு: கூருருளையின் பக்கத்திற்கு இனணயான தளவளைவு. ஒரு கூருருளையை பக்கத்திற்கு இணையாகச் செலுத்துவதன் மூலம் இது கிடைக்கிறது

parabolic girder: (பொறி .) மாலை வளைவு உத்தரம்: ஒரு மாலை வளைவுக்குள் வரையபபட்ட பல கோண வடிவில் அமைந்த ஒர் உத்தரம், இது பாலங்கள் அமைப்பதற்குப் பயன்படுகிறது

parabolic reflector: (மின்.) நீள்வட்ட பிரதிபலிப்பான்: ஆற்றலை ஒரு குறுகிய கற்றையாகச் செலுத்தப் பயன்படுத்தப்படும் ஒர் ஒளி அல்லது ஒலிப்பிரதிபலிப்பான். பிரதிபலிக்கும் பரப்பு நீள வட்ட வடிவில் அமைந்திருக்கும்