பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
469

parachute : (வானூ.) வான்குடை (பாராசூட்): வானிலிருந்து மெதுவாக மிதந்து கொண்டே தரையிறங்குவதற்குப் பயன்படும் குடை வடிவச் சாதனம். இதன் குடை வடிவம் வானிலிருந்து இறங்கும்போது காற்றை எதிர்த்து வேகத்தைக் குறைத்து மெதுவாகத் தரையிறங்குவதற்கு உதவுகிறது

parachute canopy : (வானூ.) வான்குடை மேற்கட்டி: ஒரு வான் குடையின் முக்கிய ஆதார மேற்பரப்பு

parachute flare : (வானூ.) குடை மின்னொளி: ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமான த்திலிருந்து குதிக்கும்போது ஒரு பரந்த பரப்பளவில் மின்னொளி பரவும்படி வடிவமைக்கப்பட்ட சாதனம் பொருத்திய வான்குடை

parachute harness : (வானு) வான்குடைச் சேணம்: வான் குடையை அணிந்து கொள்பவர் தன்னோடு பிணைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் பட்டைகள், பட்டைப்பிடிகள், இணைப்பான்கள் அமைந்த ஒரு கூட்டு அமைப்பு

parachut pack : (வானூ.) வான் குடைக் கொள்கலம்: கொள்கலம் கொண்டுள்ள ஒரு வான்குடை

parachute vent : (வானூ.) வான் குடைப் புழை : ஒரு வான்குடையின் மேற் கவிகையின் உச்சியிலுள்ள புழை. இது வான்குடை கீழே இறங்கும்போது மிகை அழுத்தத்தினைக் குறைத்து, வான்குடையை நிலைப்படுத்த உதவுகிறது

paraffin : (வேதி.) பாரஃபின் மெழுகு :பெட்ரோலியத்தைக் காய்ச்சி வடித்தல் மூலம் கிடைக்கும் ஒருவகை மெழுகு. இது ஒளி ஊடுருவக் கூடியது;திண்மையானது

parallax : (மின்.) மாறு கோணத் தோற்றப் பிழை : நோக்கு மயக்கம்; பார்வைக் கோணத்தால் பொருள் நிலையில் தோன்றும் மாறுதல் கோண அளவு

parallax : (விண் ) விழிக்கோட்டக் கோணளவு : ஒரு பொருளை இரு வேறுபட்ட புள்ளிகளிலிருந்து பார்க்கும்போது அதன் இயக்கத் திசையில் மேற்போக்காகக் காணப்படும் வேறுபாடு

parallel : இணைகோடு : ஒரு போக்குடைய இணைகோடுகள். இவை ஒரே திசையில் செல்பவை. எல்லா முனைகளிலும் இனை தொலைவுடையவை

parallel cells : (மின்) இணைமின்கலங்கள் : மின்கலங்களை அனைத்து நேர் மின்முனைகளும் இணைந்திருக்குமாறும், அனைத்து எதிர்மின்முனைகளும் இணைந்திருக்குமாறும் இணைக்கும் ஒரு முறை

parallel circuit: (மின் ) இணைச் சுற்று வழி :பொதுவான ஊட்டு வாயும், பொதுவான திரும்பு வாயும் உடைய இரு மின்சுற்றுவழி ஊட்டு வாய்க்கும்டையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகள் இணைக்கப்படுகின்றன. ஒல்வொரு கருவிக்கும் பொது ஊட்டு வாயிலிருந்து தனித்தனி அளவு மின்னோட்டம் பாயும்

parallel connected transformer : (மின்.) இணை இணைப்பு மின்மாற்றி :ஒரே மின் வழங்கு ஆதாரத்துடன் தொடக்கக் சுருணைகள் இணைக்கப்பட்டுள்ள ஒன்று. அதற்கு மேற்பட்ட மின் மாற்றிகள், இதில் அழுத்தப் பெற்ற மின்னழுத்தம ஒவ்வொரு நேரிவிலும் மின் வழியிலுள்ள அதே அளவுக்கு இருக்குமாறு அமைக்கப்பட்டிருககும்