பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

470

parallel feed : (மின்.) இனண மின்னூட்டம் : மின் சுற்றுவழியில் நேர்மின்னோட்டமும் மாற்று மின்னோட்டமும் வெவ்வேறு வழிகளில் பாயுமாறு அமைக்கப்பட்ட ஒரு மின்சுற்றுவழி

parallel forces: (எந்.) இனண விசை : இரண்டு விசைகள் இணையாக இருந்து, ஒரே திசையிலிருந்து தொடங்காமல் ஆனால் ஒரே திசையில் செயற்படுமானால், அதன் கூட்டு விளைவாக்கம் இரண்டு விசைகளுக்கும் இணையாகவும், அவற்றின் கூட்டுத் தொகைக்குச் சமமாகவும் இருக்கும். இரு விசைகளும் எதிர்த் திசைகளில் செயற்படுமானால், அப்போது கூட்டு விளைவாக்கம், அவ்விரு விசைகளுக்குமிடையிலான வேறுபாட்டிற்குச் சமமாக இருக்கும்

parallel jaw pliers ; (பட்.) இணைத்தடை இடுக்கி : செங்கோணியக்க இணைப்புடைய இடுக்கி. இது வாயளவு எவ்வாறிருப்பினும் தாடைகள் இணையாக இருப்பதற்கு இடமளிக்கிறது

parallel resonance : (மின்.) இணை ஒத்திசைவு : தூண்டு எதிர் வினைப்பும், கொண்மை எதிர் வினைப்பும் சரிசமமாக இருக்கும் போது, ஒர் அலைவெண்ணில் ஒரு கிளர்மின்கருவியும் ஒரு கொண்மியும் உள்ள ஒர் இணை மின் சுற்று வழி

parallel rulers : இனணகோடு வரைகோல் : ஒரு போகுக் கோடுகள் வரைவத்ற்குரிய, சுழல் அச்சால் இணைக்கப்பட்ட வரை கோல்

parallelogram :(கணி.) இணைவகம்: எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் உள்ள ஒரு நாற்கரம். பரப்பளவு = ஆதாரம் X செங்குத்து உயரம்

parallelogram of forces : (எந்.) இணைவக விசை :இரண்டு விசைகள் இணைந்து ஒரே விசையாகச் செயற்படும்போது திசையிலும் அளவிலும் மூல விசைகள் இரண்டும் ஓர் இணைவகத்தின் இரு புடைப் பக்கங்களுக்கும் இணை விசை அவற்றுக்கிடைப்பட்ட மூலை விட்டத்திற்கும் சமமாக இருக்கும் நிலை

paramagnetic : (மின்.) காந்த ஈர்ப்புப் பொருள் : ஒரு காந்தத்தினால் ஈர்க்கப்படத்தக்க பொருள்கள். இவற்றில் காந்தம் ஊடுருவ இடம் தரும் இயல்பின் அள்வு ஒன்றுக்குக் கூடுதலாக இருக்கும்

paramount : மேதகவு : அனைத்திற்குமேலான தகைமைச் சான்று

parapet : (க.க.) கைப்பிடிச்சுவர்: மேல்முகடு, மேல்மாடி, அல்லது ஒரு பாலத்தின் பக்கதில் மறைப்பாகக் கட்டப்படும் தாழ்வான சுவர்

parasite drag : (வானூ.) ஒட்டு இழுவை : விமானத்தில் இறகுகளின் விரைவியக்கப் பகுதியிலிருந்து தனித்தியங்கும் இழுவைப் பகுதி

parasitic array : (மின்) அடுக்கு வானலை வாங்கி :ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்கி மற்றும் பிரதிபலிப்பான் அலகுகள் உடைய ஒர் இரு துருவ வானலை வாங்கி

parasol monoplane : (வானூ.) விமானத்துள் விமானம் : விமானத்தின் கட்டுமானச் சட்டகத்திற்கு மேலே இறகு அமைந்துள்ள ஒரு குறு விமானம்

parathyroid glands : ( உட.) இணை நாளமில் சுரப்பிகள் : நாளமில் சுரப்பிகளுக்குப் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் உள்ள நான்கு சிறிய சுரப்பிகள். இவை