பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

472

எதிர்மின் தகடாகவோ மாறுகிறது

pastel :வண்ணக்கோல் : வண்ணக் கோல்கள் செய்வதற்காகப் பசை நீரில் நிறமிகளைக் கலந்து உண்டாக்கப்படும் உலர் பசைக் கோல்

pasteurization : (குளி.ப.த.) பால் துப்புரவாக்கம் : ஃபிரெஞ்சு விஞ்ஞானியான லூயி பாஸ்ட்ர் முறைப்படிப் பாலைச் சூடாக்கித் துப்புரவு செய்தல்

patella: (உட.)கால் முட்டெலும்பு: கால் மூட்டெலும்பு,

முழந்தாள் முட்டுச்சில்லு

patent : காப்புரிமை : புதுமுறை ஆக்க விற்பனைகளுக்கு அரசு வழங்கும் தனிக் காப்புரிமை

patent application: புனைவுரிமை விண்ணப்பம் : புத்தமைப்பாளர் தனது கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறுவதற்காக புனைவுரிமை அலுவலகத்திற்கு வரைபடங்கள், உரிமைக்கோரிக்கை ஆகியவற்றுடன் அளிக்கும் விண்ணப்பம்l

patenting: மெருகிடல்: இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை முட்டுபதன் அளவுக்குச் சூடாக்கி, பிறகு அளவுக்குக் குறைவாகக் காற்றிலோ அல்லது 700° ஃபா. வெப்பமுடைய உருகிய ஈயத்திலோ குளிர்வித்து மெருகிடுதல்

patina : பசுங்களிம்பு : பழைய வெண்கலப் பொருள்களில் காலத்தால் ஏறும் உலோகக் களிம்பின் மென்படலம்

pattern : (வார்.) தோரணி : ஒர் எடுத்துக்காட்டு வார்ப்பு. முன் மாதிரியாகக் கொண்டு ஒரே மாதிரியான பொருள்களை வார்ப் படம் மூலம் செய்வதற்கான படிவம்

pattern letter : (வார்.) முன் மாதிரி எழுத்து : ஈயம், வெள்ளியம் அல்லது பித்தளையில் செய்த எழுத்து. இது ஒரு தோரணையில் பொருத்தப்ப்ட்டிருக்கும். அதிலி ருந்து ஒரே மாதிரியான பெயர் அல்லது இலக்கத்தை வார்த்தெடுக்கலாம்

pattern - making : தோரணி வார்ப்படம் : வார்ப்படத் தொழிலில் பல்வேறு மாதிரிகளை அல்லது உருவரைகளைத் தயாரிப்பதற்குப் பயன்படும் வார்ப்படம்

pattern shop : தோரணிப் பட்டறை: வார்ப்படங்கள் தயாரிக்கப் பயன்படுத்துவதற்கான மரத் தோரணிகளைத் தயாரிக்கும் பட்டறை

pavement : (க.க.) தள வரிசை: சாலை அல்லது ஒர நடைபாதையில் அமைக்கப்படும் கடினமான பாவு தளம்

pavilion : (க.க.) காட்சி அரங்கம் : முற்றிலும் சுவர்களினால் அடைக்கப்படாமல் கூடாரமிட்ட ஒப்பனைப் புறத் தாழ்வாரம். காட்சி அரங்காக அல்லது கேளிக்கை அரங்காக இது பயன்படும்

pay load: (வானூ.) வருவாய்ப் பகுதி : விமானத்தில் பயணிகள், சரக்குகள் போன்ற வருவாய் தரும் பாரத்தின் பகுதி

payne's process : தீத்தடைக் காப்பு முறை : மரத்தில் இரும்பு சல்போட்டை ஊசிமூலம் செலுத்தி, அதன்பின் சுண்ணாம்புச் சல்பேட்டு அல்லது சோடா கரை