பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

476

பரப்புக் காட்சிக் கருவி, பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி

peristyle: (க.க.) சுற்றுத் தூண் வரிசை: கோயில், மடம், மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை

permalloy: (மின்.) காந்தக் கூருணர்வு உலோகக்கலவை: இரும்பு, நிக்கல், கோபால்ட், குரோமியம், வனேடியம், மாலிப்டினம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய உலோகக் கலவை

permanent load: (பொறி.) நிலைச் சுமை: எந்திரத்தில் அதன் கட்டமைப்புச் சுமை போன்ற ஒரு போதும் மாறாத நிலையான சுமையின் அளவு

permanent magnet : (மின்.) நிலைக் காந்தம்: ஒரு காந்த எஃகு தான் பெற்ற் காந்த சக்தியை ஒரு போதும் இழக்காமல் ஒரு காந்தப் புலத்தின் ஆற்றலுடன் நிரந்தரமாக இருத்தி வைத்துக் கொள்கிறது. இக்காந்தம் நிலைக் காந்தம் எனப்படும்

permanganate: (வேதி.) பெர் மாங்கனேட் (HMnO4): பெர்மாங் கனிக் அமிலத்தின் உப்பு. இது அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும்

permeability (மின்.) கசிவுத் திறன்: ஊறி உட்புக இடந்தரும் திறன்

permeability curve: (மின்.) ஊடுருவுதிறன் வளைகோடு: காந்த மூட்டும் விசையின் அளவு மாறு படும்போது, ஒரு பொருளின் வழியே உண்டாகும் காந்தவிசை யின் அடர்த்தியை அல்லது கோடு களின் எண்ணிக்கையைக் குறிக்கும் வரைபடத்திலுள்ள ஒரு வளை கோடு

permeameter: (மின்.) காந்தவிசைமானி:ஒரு பொருளின் வழியாகச் செல்லும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கையையும், காந்தமூட்டும் விசையினையும் அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

permutation: (கணி.) முறை மாற்றம்: ஒரு தொகுதியில் அடங்கிய பொருட்கள் ஒன்று மாற்றி ஒன்று வரிசை மாறும் ஒழுங்கமைவு

perpend: (க க.) ஊடுகல்: சுவரின் ஒரு கல்லிலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அதனூடே செல்லும் கல்

perpendicular: செங்குத்துக் கோடு: வழி கோட்டிற்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாக உள்ள கோடு

perron: (க.க.) வாயிற்படி மேடை: ஒரு கட்டிடத்திற்கு வெளியே முதல் மாடிக்குச் செல்ல அமைந்துள்ள வாயிற்படி

persimmon : (தாவ.) ஈச்சமரம் : அமெரிக்கவகை ஈச்சமரம். இது பெரிதாக வளர்வதில்லை. அதனால் இதற்கு வாணிக மதிப்பு அதிகம் இல்லை. இதன் வெட்டு மரம் மஞ்சள் நிறமுடையது; அதில் கறுப்புக்கோடுகள் இருக்கும்.இது வலுவானது.மிகுந்த பளப்ளப்புடையது. பில்லியர்ட்கோல் மேலடை மெல்லொட்டுப் பலகை செய்யவும் இது பயன்படுகிறது

persistence of vision :பார்வை எதிர்ப்பாற்றல்: ஒருபிம்பம் உருவாவதற்குக் காரணமாக ஒளி நின்ற பிறகும் 1/12 வினாடி வரை அந்தப்பிம்பம் கண்ணில் தொடர்ந்து நிலைத்திருக்கும். கண் வேதியியல் முறையில் செயற்படுவதும், வேதியியல்பொருட்கள் மீண்டும் பழைய நிலைக்கும் உடனடியாகத் திரும்பு வதில்லை என்பதும் இதற்குக்