பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

478

சுற்று வழியில் அலைவெண்ணைக் குறிக்கும் மானி. இதனை அலை வெண் மானி என்றும் கூறுவர்

phenol : (வேதி.) கரியகக் காடி: (C2H5OH) ஒரு படிகப் பொருள் கரி எண்ணெயிலிருந்து (கீல்) ஒரளவு எடுக்கப்படுகிறது. சோடியம் பென்சைன் சல்ஃபொனேட்டை காரச்சோடாவுடன் இணைத்துச் செயற்கை முறையிலும் தயாரிக்கப் படுகிறது. கிருமி நீக்கியாகப் பயன்படுகிறது

phanolic-resins molding type: (வேதி;குழை,) பெனோலிக் பிசின் வார்ப்படம் : பிளாஸ்டிக் குடும்பத்தில் மிகப் பழமையானது; மிக முக்கியமானது. குறைந்த செலவில் கிடைக்கக்கூடியது; பயனுள்ள பண்பியல்புகளைக் கொண்டது. இவற்றின் வெப்பத்தை எதிர்க்கும் தன்மையும், பெரும்பாலான அரிமானப் பொருட்களை எதிர்க்கும் தன்மையும் முக்கியமானது. இது மின் கடத்தாப் பொருளாகும். எனவே இதைக் கொண்டு மின் செருகிகள் இணைப்புக் கைபிடிகள், அடைப்பான்கள் போன்ற சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

pheno plast : (வேதி;குழை,) பெனோ பிளாஸ்ட்: பெனால் ஆல்டி ஹைட் பிசின்களைக் குறிக்கும் பொதுவான சொல். இதனை 'பெனோலிக்ஸ்' என்றும் கூறுவார்

phonograph : (மின்.) இசைப் பெட்டி : நீள் உருளைகளைப் பயன் படுத்திச் செய்யப்பட்ட பழைய ஒலிப்பதிவு முறை இசைப் பெட்டி

phonography : (மின்.) ஒலிப்பதிவுக் கருவி : ஒலிகளைப் பதிவு செய்யும் கருவிகொண்டு தானே ஒலிப்பதிவு செய்யும் கருவி

phosphor bronze : ( உலோ.) பாஸ்போர் வெண்கலம் : தாமிரம், வெள்ளீயம் ஆகியவற்றுடன் சிறிதளவு பாஸ்பரம் கலந்த ஓர் உலோகக் கலவை, இது பெரும்பாலும் தாங்கிகள் செய்யப் பயன்படுகிறது

phosphorus : (வேதி.) பாஸ்பரஸ் : இளமஞ்சள் நிறமுள்ள மெழுகு போன்ற் திடப்பொருள். ஒப்பு அடர்த்தி 1.83; உருகுநிலை 44.4°C. இது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. இதனை எப்போதும் தண்ணிரிலேயே அமிழ்த்து வைத்திருக்கவேண்டும். இது சிறுசிறு குச்சிகளாக விற்பனை செய்யப்படுகிறது

photo-chemistry : (வேதி.) ஒளிவேதியியல்: பொருட்களின் மீது ஒளியின் விளைவுகள் குறித்து ஆராயும் வேதியியல் ஒளிப்படக் கலையிலும் ஒளி வேதியியல் மின் கலங்களிலும் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன

photo composing : (அச்சு.) ஒளிப்பட அச்சுக்கோப்பு: ஒளிப்பட முறையில் அச்சுக்கோக்கும் முறை

photo-elasticity : (குழை.) ஒளி நெகிழ்திறம் : ஒரு செல்லுலாய்ட் அல்லது கண்ணாடி மாதிரியில் இரட்டை ஒளிக்கோட்டத்தை உண்டாக்குவதற்குப் போதுமான நெகிழ்திறன் இழுவிசை பற்றிய ஆய்வு

photo electric cell : (மின்.) ஒளி மின்கலம் : ஒளியாற்றலை மின்னாற்றலாக மாற்றக் கூடிய ஒரு சாதனம். ஒளி ஆதாரத்தின் மூலம் தானாகக் கட்டுப்படுத்து வதற்கு இது முக்கியமாகப் பயன்படுகிறது

photo electric effect : (மின்.) ஒளிமின் விளைவு : சில பொருட்களின் மீது ஒளிபடும் போது, எலெக்ட்ரான்களை வெளியிடும் இயல்பு