பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

480

photovoltaic: (மின்.) ஒளி வேதியியல் விளைவு : இரு பொருட்களின் இணைப்பில் ஒளிபடும் பொழுது மின்னழுத்தம் உண்டாதல்

photo-voltaic cell: ஒளி வேதியியல் மின்கலம்: இரண்டு வேறுபட்ட பொருட்கள் (தாமிரம், தாமிர ஆக்சைடு) இணையும் போது, ஒளிபடும்போது ஒரு மின் கலம் மின்விசையை உற்பத்தி செய்வது போல், மின்விசையை உற்பத்தி செய்யும் மின்கலம்

physical astronomy : (இயற்.) இயற்பியல் வானியல் : வான் கோளங்களின் இயற்பியல் நிலையையும் வேதியியல் நிலையையும் ஆராயும் அறிவியல் துறை

physical change : (இயற்.) இயற்பியல் மாற்றம் : ஒரு பொருளின் தற்பண்புகள் மாறாத வகையில் ஏற்படும் மாற்றம். எடுத்துக்காட்டு: ஒரு பலகையை ரம்பத்தால் அறுத்துச் சிறுசிறு துண்டுகளாக ஆக்குதல்

physical chemistry : இயற்பியல் வேதியல் : இயற்பியல் சார்ந்த வேதியியல் கூறுகளையும், வேதியியல் சார்ந்த இயற்பியல் பண்புகளையும், வேதியியல் இயைபுகளோடு உடனடியாக ஏற்படும் இயற்பியல் மற்றங்களையும் ஆராய்ந்தறியும் துறை

physical geography : (இயற்.) இயற்பியல் நிலவியல் : இயற்கை அமைப்புகளைப் பற்றிக்கூறும் நிலவியல்

physical metallurgy : இயற்பியல் உலோகவியல் : உலோகங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆராய்ந்தறியும் துறை

physics : இயற்பியல் : இயற்பொருள், ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை

physiology : (உட.) உடலியல்  : விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் பற்றிய ஆய்வியல்

physiotherapy : (நோயி.) இயற்கை மருத்துவம் : உடம்பு பிடித்து விடுதல். தூயகாற்று, மின்சாரம் முதலிய இயற்கை முறைகளினால் நோய்களுக்கு மருத்துவம் செய்யும் முறை

pi: (கணி.) பை: வட்டத்திற்கும் விட்டத்திற்கும் சுற்று வரைக்கும் உள்ள தகவினைக் குறிக்கும் 'பை' என்ற வட்டலகின் அடையாளம், இது 'பை' என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்தினால் குறிக்கப்படுகிறது பை(π) = 3.1416

piano wire: (உலோ. பியானோ கம்பி: மிகவும் வலுவான ஒரு கம்பி. இதன்விறைப்பாக்க வலிமை ஒருசதுர அங்குலத்திற்கு 3,00,000 முதல் 3,40,000 பவுண்டு ஆகும். இதில் கார்பன் 0.570, சிலிக்கன் 0.090, சல்பர் 0.011, பாஸ்பரம் 0.018, மாங்கனீஷ் 0.425 அடங்கியுள்ளது

pica: பிக்கா: ஓர் அங்குலத்தில் ஆறு வரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருவப் படிவம்

picket (தச்சு.வே.) கட்டுத்தறி: வேலிகளுக்கான முளை, குதிரை முதலியவற்றைக் கட்டிவைப்பதற்கான முளை

pickle: வார்ப்படக்கரைசல்: வார்ப் படங்களைத் தூய்மையாக்குவதற்குப் பயன்படும் கரைசல். இரும்பு வார்ப்படங்களுக்கு நீர்த்த கந்தக அமிலமும், பித்தளைக்கு நைட்ரிக் அமிலமும் பயன்படுகின்றன