பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

482

கத்திற்கு வரும் வார்ப்பிரும்பு. இது பொதுவாக 45 கி.கி. எடையுள்ள பாளங்களாக இருக்கும்

pigment : (வேதி;அச்சு.) நிறமி : வண்ணப் பொருளுக்கு அல்லது சாயப்பொருளுக்கு நிறம் சேர்க்கச் சேர்க்கப்படும் பொருள்

pigskin : பன்றித் தோல் : பதனிட்ட பன்றித்தோல். வீட்டில் வளர்க்கப்படும் பன்றியின் தோலிலிருந்து நெடுநாள் உழைக்கக் கூடிய, தரமான தோலினைப் பதனிட்டு, கையுறைகள், சிகரெட் பெட்டிகள், கைப்பைகள் முதலியன தயாரிக்கிறார்கள்

pigtail : (மின்.) புரியிணைவு மின் கடத்தி:

இணை மின்கடத்திகளின் அவிழ்முனைகளை புரியாகத் திரித்துத் தயாரிக்கப்படும் மின் கடத்திகள்

pilaster : (க.க.) : சதுரத் தூண் : அலை இடைகரையில் அல்லது சுவரில் நீட்டிக் கொண்டிருக்கும் சதுரத் தூண்

pile driver : பதிகால் எந்திரம் : கட்டிட அடிப்படை தாங்கும் நீண்ட பதிகால்களை அடித்திறக்கு வதற்கான எந்திரம்

piling : (பொறி.) பதிகால் : ஆற்றின் சேற்று நிலத்தில் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்படும் பாலக்கால்

pillar : (க.க.) தூண் : கட்டு மானத்தைத் தாங்கி நிற்பதற்கான தூண்

pillar (க.க.) தூண் : ஒரு கட்டு மானத்தின் ஆதாரக்கால்

pillow block: (எந்.) முட்டுத் திண்டுக்கட்டை : ஒரு சுழல் தண்டுக்கு முட்டுக்கொடுப்பதற்கான திண்டுக்கட்டை

pilot : (வானூ.) விமானம் ஓட்டி : விமானம் பறப்பதைக் கட்டுப் படுத்தி இயக்குபவர்

pilot : (வானூ.) விமானம் ஓட்டி : விமானப் பயணத்தைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர்

pilot balloon : (வானூ.) திசயைறி புகைக் கூண்டு: காற்றுவீசும் திசையையும் வேகத்தையும் கண்டறிவதற்காக மேலே பறக்கவிடப்படும் சிறு புகைக் கூண்டு

pilot drill ; (கணி.) முன்னோடித் துரப்பணம் : ஒரு பெரிய துரப் பணத்தைச் செலுத்துவதற்கு வசதியாக ஒரு முன்னோடித்துளையிடுவதற்குப் பயன்படும் சிறிய துரப்பணம்

pilot hole: (உலோ.) முன்னோடித் துளை : ஒருபெரிய துளையிடுவத்ற்காகத் துரப்பணத்தைச் செலுத்துவதற்குப் பயன்படும் ஒரு சிறிய துளை

pilotless aircraft : (வண்.) ஆளில்லா விமானம் : செலுததுவதற்கு ஆளில்லாமல் இயங்கக் கூடிய ஒருவகை விமானம். இது தானியங்கும் சாதனம் அல்லது வானொலி ஆணை மூலம் இயக்கப்படுகிறது

pilot light: (மின்.) வழிகாட்டி விளக்கு : ஒரு சுவர்ப்பெட்டியில் அல்லது கொள்கலத்தில் கட்டுப்பாட்டு விசையில் அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறு விளக்கு. இது அதனுடன் இணைக் கப்பட்டுள்ள சாதனம் இயங்குகிறதா என்பதைக் காட்டும்

pilot parachute : (வானூ.) முன்னோடி வான்குடை: முதன்மையான வான்குடையின் நுனியில் இணைக்கப்பட்டுள்ள, திறப்புக் கயிறை