பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
483

இழுத்ததும் முதன்மை வான்குடையை விரிக்கும்படி செய்யக்கூடிய ஒரு சிறிய துணை வான்குடை

pilot plant : (முன் மாதிரி எந்திரம்)

pin : (தச்சு.வே.) பிணைப்பூசி : மரம் அல்லது உலோகத்தினாலான முளை

pincers: குறடு; இரு கவர் உள்ள இடுக்குப் பொறி

pine : (தாவ.) தேவதாரு: பசுமை மாறாத ஊசி இலை மரம். கடினமானது; கனமானது; கனரகக் கட்டுமானத்திற்குப் பயன்படக் கூடியது

ping : (தானி.) விண்ணொலி: துப்பாக்கிக் குண்டு பாய்தல் அல்லது எஞ்சின் நீள் உருளை வெடித்தல் மூலம் உண்டாகும் விண்ணென்ற ஒலி

pinion : (பல்.) சிறகுப் பல்லிணை: வடிவளவு எவ்வாறிருப்பினும், சரி வாக்கிய அல்லது குதிமுள்ளுடைய ஒரு சிறிய பல்லிணை

pin-knot (மர.வே.) ஊசி முடிச்சு: 1.27 செ.மீக்கு மேற்படாத விட்டமுடைய ஒரு வகை முடிச்சு

pinnacle : (த.க.) கோபுர முகடு : உயர்ந்த அல்லது மிக உயர்ந்த மோட்டு முகடு

pin punch : (பொறி .) முளைத் தமருசி : இறுக்கமாகப் பொருத்திபுள்ள முளைகளை வெளியே எடுப்பதற்குப் பயன்படும் ஒரு நீளமான மெல் தமருசி

pin spanner : (எந்.) முளைப்பு முடுக்கி: சுற்றுப்புறப் பரப்பில் புரி முடுக்கி முளைகள் நுழைவதறகுள்ள துவாரங்கள் கொண்ட வட்ட மரையாணிகளை முடுக்குவதற்குப் பயன்படும் முனைப்புரி முடுக்கி

pin-wheel: (பொறி.) சிறுசக்கரம்: கடிகார மணியடிக்கும் நெம்பு கோலை உயர்த்தும் பற்களை விளிம்பில் கொண்ட சிறு சக்கரம்

pint : பிண்ட் : நீர் முகத்தளவைச் சிற்றலகு. ஒரு காலனின் எட்டில் ஒரு பகுதி

pintle : ((எந்.) தாழ்கட்டை : சுழலுறுப்புக்கு ஊடச்சாக உதவும் தாழ்கட்டை

pipe : (உலோ.) குழாய் : திரவங்கள் முதலியவற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படும் உட்புழையுடைய நீண்டகுழாய். குழாய்கள் எஃகு, இரும்பு, செம்பு, பித்தளை, உலோகக் கலவைகள் முதலியவற்றால் செய்யப்படுகிறது

pipe coupling : (கம்மி.) குழாய் :இணைப்பி : இரு குழாய்களை இணைப்பதற்குப் பயன்படும் மரையுள்ள குழல்

pipe cutter (கம்மி.) குழாய் வெட்டி : இரும்பு, எஃகுக் குழாய்களை வெட்டுவதற்குப் பயன்படும் கருவி. இதன் வெட்டுமுனை வளைவாக இருக்கும். இந்த முனையைத் குழியில் பதித்துச் சுற்றுவதன் மூலம் குழாய் வெட்டப்படுகிறது

pipe die : (கம்மி.) குழாய் மரை பொறிப்புக் கட்டை : குழாய்களில் திருகிழகளைப் பொறிப்பதற்குப் பின்படும் திருகு தகட்டுக் கருவி

pipe thread : ((எந்.) குழாய்த் திருகிழை : குழாய்களிலும், குழல்லும் பய்ன்படும் 'V' வடிவத்து கிழை. இதுறுக்கமான இணைப்புகளை அமைக்கப் பயன்படுகிறது