பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

486

planchet : (பட்.வே.) உருப்பெறா நாணயம் : உலோகத் தகட்டிலிருந்து வெட்டப்பட்ட முத்திரைகள் எதுவும் பதிக்கப்படாமலிருக்கும் உருப்பெறாத நாணயம்

plane : (1) சமதளம் :சரிமட்டமான சமதளப் பரப்பு. இரு புள்ளிகளை இணைக்கும் நேர்கோடு அதே பரப்பில் அமைந்திருக்குமானால் அது சமதளம் ஆகும்

(2) இழைப்புளி : உலோகம் அல்லது மரத்தை இழைத்துத் தளமட்டப்படுத்தும் கருவி

plane trigonometry : (கணி.) திரி கோண கணிதம்: முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்து ஆராயும் கணிதவியல் பிரிவு: இதில் கோணங்களையும் பக்கங்களையும் தொடர்புபடுத்தி ஆறு சார்பலன்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவை கணிதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை

plane : (1) சமதளம் : சமதளமான பரப்பு

(2) இழைப்புகருவி : இழைத்து வழவழப்பாக்குவதற்கான கருவி

(3) விமானம் : வான ஊர்தி

planer : (எந்.) இழைப்புளி : உலோகத்தை இழைத்துத் தளமட்டப்படுத்துவதற்கான இழைப்புக் கருவி

planetary electrons : (மின்.) கருமைய எலெக்ட்ரான் :ஒர் அணுவின் கருமையத்தைச் சுற்றி வலம் வருவதாகக் கருதப்படும் எலெக்ட்ரான்கள்

planetary hour : கோளநேரம் : இயற்பகலின் அல்லது இயலிரவின் பன்னிரண்டில் ஒரு கூறு வேலை

planetary influence: கோள் விளைவு : கிரகபலன்

planetary system : கதிரவன் மண்டலம் :

planetesimal : கோளணு : குளிர் நிலையில்கோள்கள் திரண்டு உருவாவதற்குக் காரணமாக இருந்ததாக்க் கருதப்படும் கோளநிலை அணுத் துகள்

planetoid : குறுங்கோள் : செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே கதிரவனைச் சுற்றி வரும் ஆயிரக்கணக்கான சிறு கோங்களில் ஒன்று

planimeter : ((கணி.) தளமட்ட மானி : சமதளப்பரப்பு எதனின் பரப்பளவையும் அளவிடுவதற்கான ஒரு கருவி. இக்கருவியின் முள்ளை எல்லையோரமாக நகர்த்தி அளவுகோலைப் பார்த்து பரப்பளவை அறியலாம்

planish : (உலோ.) மெருகூட்டுதல் : உலோகப் பரப்புகளை சுத்தியால் அடித்து அல்லது உருட்டி மெருகூட்டுதல்

planishing hammer : (உலோ.) மெருகூட்டு சுத்தி : ஒளிரும் முகமுடைய பரப்புகளில் ஒழுங்கற்ற பகுதிகளை நீக்கி மெருகூட்டுவதற்குப் பயன்படும் சுத்தியல். இதன் கொண்டையை வேலைக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொள்ளலாம்

plank : (மர.வே.) பலகை : ஒர் அட்டையை விடக் கனமான அகலமான மரப்பலகை.3.81-15 செ.மீ. கனமாகவும் 15.செ.மீ அகலமாகவும் இருக்கும்

plankton ; (உயி.) மிதவை உயிர்கள் : கடல் முதலியவற்றில் நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி

plankton : (உயி.) மிதவை உயிர்கள் : கடல் முதலியவற்றில் நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி