பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
491

வது எலெக்ட்ரான்=புளுட்டோனியம் (அணு எண் 94). இது அணு ஆயுதங்களிலும், சில அணு உலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது

ply : படலம் : பல அடுக்குகளாக உருவாக்கிய திண்மையின் ஒரு படலம். இத்திண்மையின் ஒவ்வொரு அடையும் ஒரு படலம் ஆகும்

plywood : (மர.வே.) ஒட்டுப் பலகை : படலங்களின் இழைவரை ஒன்றற்கொன்று குறுக்காக வைத்து ஒட்டிக் செய்யப்படும் மெல்லிய வன் பலகை

pneolator :(எந்.) செயற்கைச் சுவாசக் கருவி; இடம் விட்டு இடம் கொண்டு செல்லக்கூடிய தானாக இயங்கும் செயற்கைச் சுவாசக் கருவி

pneumatic : (பொறி.) காற்றுப் பட்டை : காற்றடைத்த குழாய்ப் பட்டை

pneumatic brakes : (தானி.) காற்றுத் தடை: காற்று அழுத்தம் அல்ல்து வெற்றிடம் மூலம் இயக்கப்படும் தடை

pneumatic dispatch:காற்றழுத்த இயக்க முறை: காற்றழுத்தத்தினால் அல்லது காற்று வெளியேற்றத்தினால் இயக்கப்பட்டுக் குழாய்கள் வழியாகச் சிப்பங்கள் முதலியவற்றை இடம் பெயர்த்துக் கொண்டு செல்லும் முறை

pneumatic tire : (தானி.) காற்றுக் குழாய்ப் பட்டை : காற்றடைத்த குழாய்ப் பட்டை

pneumatic tools : (போறி.) காற்றழுத்தக் கருவி: காற்றழுத்தத்தின் மூலம் இயக்கப்படும் சாதனம்

pneumatic trough : வளிக்கொள் கலம் : நீர் அல்லது பாதரசப் பரப்பின் மேல் ஜாடிகளில் காற்றினைத் திரட்டுவதற்கான கலம்

pock marks : (வண்.) அம்மைத்தழும்பு : அம்மை நோயினால் உடலில் ஏற்படும் தழும்புகள் போன்ற வண்ணப் பரப்பு

point : (அச்சு.) அச்செழுத்துரு அலகு: அச்செழுத்துருவின் ஒர் அலகு. ஒர் அலகு=.031837 அங்

pointing : (க.க.) இணைப்புக் காரைப்பூச்சு: கட்டுமானத்தில் இணைப்புக் காரைப்பூச்சு

point system : (அச்சு.) அச்செழுத்து அலகு முறை அச்செழுத்துகளை வார்ப்பதற்கான அளவை முறை

polar circle : துருவச் சக்கரம் : நில முனைக்கோடி வட்டம்

pointing trowel : (க.க.) கூர் சட்டுவக் கரண்டி: சுவர் இணைப்புகளில் கூர்மையாகச் சாந்து பூசவும், எஞ்சிய சாந்தினை அகற்றிச் சுத்தப்படுத்தவும் பயன்படும் சிறிய சட்டுவக்கரண்டி

polar coordinates : (மின்.) துருவ ஆயத் தொலைவுகள் : ஒர் ஏவரையின் பரிமாணத்தினால் வரையப்படும் ஏவரையும், தொடர்புக் கோட்டுடன் அதன் கோணமும் துருவ ஆயத்தொலைவுகள் எனப்படும்

polar disfance : துருவ கோணத் தொலைவு :அண்மையிலுள்ள நில முனைக்கோடியிலிருந்து கோளப் புள்ளிக்குள்ள கோணத்தொலைவு

polarimeter : : வக்கரிப்புக் கோட்ட மானி:ஒளிக்கதிர் வக்கரிப்புக் கோட்ட மானி

polarity: (மின்.) துருவ முனைப்பு: இருகோடிகளும் நில்லுலக முனைக் கோடிகளை நோக்கி முனைத்து