பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

492

நிற்கும் காந்தக்கல், காந்த ஊசி முதலியவற்றின் இயல்பு; மின்னுரட்டு முனைக்கோடி இயல்பு

polarization : (மின்.) : மின் முனைப்பாக்கம் : அடிப்படை மின் கலத்தில், நேர்மின் தகட்டில் ஹைட்ரஜன் குமிழ்கள் சேர்தல். இதனால் அகத்தட்டை அதிகரித்து, மின்னோட்ட வலிமை குறைகிறது

polarized light: (குழை.) முக ஒளிக்கதிர்: போக்கின் திசை ஒரு முகப்படுத்தப்பட்ட ஒளிக் கதிர்கள்

polar molecule : (மின்.) துருவ மூலக்கூறு : ஒரு முனை எதிர் மின் முனையாகவும் இன்னொரு முனை நேர்மின் முனையாகவும் செயற்படுகிற ஒரு மூலக்கூறு, எடுத்துக் காட்டு ஹைட்ரஜன் குளோரைடு

polaroid : (மின்.) மின்முனைப் பூட்டி: ஒளியை மின்முனைப்பாக்க மூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் அயோடினும் கொய்னாவும் கலந்த ஒரு கூட்டுப் பொருளின் படிகங்களையுடைய தகடு

polar vectors: (மின்.) துருவ நேறியங்கள் : ஒரு பொதுவான மையத்திலிருந்து அல்லது துருவத்திலிருந்து நீட்சியாகின்ற நேறியங்கள்

pole : (மின்.) (1) மின்முனை : மின்கலம் மின்கல்த்தொகுதி அல்லது நேர்மின்னாக்கியின் இரு முனையங்களில் ஒன்று

(2) துருவம் : ஒரு காந்தத்தின் காந்தமுனைபபுளள ஒரு முனை

pole piece : (மின்.) துருவமுனை முகம்: ஒரு மின்னாக்கிப்புலத்தில் தலச்சுருணைகளைச் சுற்றிவைப்ப தற்காகவுள்ள இரும்பு மென் தகட்டு உள்ளீடு

pole pitch: (மின்.) துருவச்சாய் அளவு: ஒரு மின்னாக்கிப் புலத்தில் இரு அண்டைத் துருவங்களின் மையங்களுக்கிடையிலான புற எல்லைத் தொலைவு

poles : (மின்.) மின் முனைப்புக் கோடிகள் : ஒரு மின் சுற்று வழியின், மின்முனைப்புக் கோடிகள் (துருவங்கள்)

pole shoes : (மின்.) காந்தலாடம் : லாடம் போல் வளைந்த துருவ முனைக் காந்தம்

polio : (நோயி.) இளம்பிள்ளை வாதம் : குழந்தைகளின் முதுகுத் தண்டின் சாம்பல்நிற உட்பகுயில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது. இந்த நோய்க்கிருமிகள், மலத்தில் காணப்படுகின்றது. உடலுக்குள் இவை எவ்வாறு புகுகின்றன என்பது தெரியவில்லை. இந்நோய் பெரியவர்களையும் பாதிக்கிறது

polish : மெருகு : தேய்ப்பதனால் உண்டாகும் மினுமினுப்பு அல்லது பளப்பளப்பு

polychrome: : பல்வண்ணக்கலை:பல வண்ணங்களைக் கொண்டு பூச்சு வேலைப்பாடுகள் செய்தல். இந்தக் கலை எகிப்தில் தோன்றியது. இத்தாலியில் 16ஆம் நூற்றாண்டில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது

polymers: (வேதி;குழை) மீச்சேர்மம்: ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலேயே அனுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்

polyester: (குழை.) பாலியஸ்டர் : குழைமக் குடும்பத்தைச் சேர்ந்த செயற்கை இழைவகை. இரு நீரக அணு ஆல்கஹால்களையும். இரு