பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
493

காடி மூலங்களுடைய அமிலங்களையும் எண்முகச் சேர்ம ஸ்டைரீரினுடனும் பிறவற்றுடனும் இணையுமாறு செய்து பூரிதமற்ற பாலியஸ்டர் தயாரிக்கப்படுகிறது. திரவவடிவில் இதனை எளிதில் கையாளலாம். இது வெப்பத்தையும், அரிமானத்தையும் தாங்கக் கூடியது. சிறிய மின்சாரச் சாதனங்கள், கட்டிடச் சேணங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது

polyethylene: (குழை.) பாலித்திலீன்: வெப்புத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடையது. எத்திலீன் மீச்சேர்மங்களாலானது. கெட்டியான மெழுகு போன்றது. நீரினால் பாதிக்கப்படாதது. நெகிழ்வுடைய புட்டிகள் வெப்பத்தைத் தாங்கும் விரிப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது

polygon: பலகோணக் கட்டம்: நான்கிற்கு மேற்பட்ட பக்கங்களையும், கோணங்களையும் உடைய வரைபடிவம்

polygon of forces: விசைகளின் பலகோணக் கட்டம்: விசைகளின் முக்கோணங்களின் விரிவாக்கம், ஒரு பல கோணக் கட்டத்தின் பக்க்ங்களால் வரிசைப்படி அளவிலும் திசையிலும் பல விசைகள் குறிப்பிடப்படுமானால், அவை சம நிலையில் இருக்கும்

polymer: (குழை.) மீச்சேர்மம்:ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்டபிறதுருச் சேர்மம்

polymerization: (வேதி.) மீச்சேர்ம இணைவு:ஒரே வகைப்பூட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுப்ட்ட பிறிதுருச் சேர்மமாக இணைதல். எடுத்துக்காட்டு: தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் 6 பாரமால்டிஹைடு மூலக் கூறுகள் (CH2O) பச்சையம் மூலமாக ஒரு சர்க்கரை (CH6H{sub|12}}O{sub|6}}) கூறாக மாறுதல்

polyphase: (மின்.) பன்னிலை:இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்னோட்ட இயக்கப் படி நிலை அல்லது மின்னியல் முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் சுற்றுவழிகள்

polystyrene: (வேதி;குழை.) பாலிஸ்டைரீன்: வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய அமிலத்தை எதிர்க்கக்கூடிய ஒரு வகைப்பிசின். அமிலக் கொள்கலங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

polytechnic: பல தொழில் நுட்பப் பயிற்சியகம்: பல தொழில் நுட்பங்கள் பயிற்றுவிப்பதற்கான பள்ளி அல்லது நிறுவனம்

polyvinyls: : (குழை.) பாலிவினில் : பாலிவினில் குளோரைடு. பாலிவினில் அசிட்டால், பாலிவினில் ஆல்கஹால் போன்றவை அடங்கிய ஒரு வேதியியல் பொருள் குடும்பம் முதலாவது, வினில் குளோரைடு மீச்சேர்மங்கள் அடங்கிய இரு குழைமப் பொருள். இது நீர், ஆல்கஹால், அமிலங்கள் காரங்க்ள் ஆகியவற்றை எதிர்க்கக் கூடியது

pons: (உட.) மூளைப் பாலம்: மூளையின் இரு பாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப் பட்டை

pons varo]li (உட.) மூளை இணைப்பு: மூளையின் இரு பாதிகளையும் இணைத்து, மூளையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கின்ற நரம்பிழைப் பட்டை

poplar (மர.வே.) நெட்டிலிங்கம்: ஒருவகை மரம்; மென்மையானது