பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

496

ழுத்த நிலைகளை ஒரு தர அளவுடன் ஒப்பிட்டு அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

pothook : (கம்மி.) பானைக்கொக்கி : உலையிலிருந்து உருகிய ஈயமுள்ள ஒருபானையைத் தூக்குவதற்குப் பயன்படும் கொக்கி

potted circuit : (மின்.) கலத்திரட்ட மின் சுற்று வழி: ஈரப்பதம், வெப்பம் இவற்றுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கு மின்காப்புப் பொருளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஒரு மின்சுற்று வழி

potters wheel : வேட்கோத் திகிரி: குயவர்கள் களிமண்ணுக்கு உருக்கொடுக்கப் பயன்படுத்தும் சக்கரம்

pottery : மட்பாண்டத் தொழில் : சட்டி பானை செய்யும் மட்பாண்டத்தொழில் அல்லது களிமண் பாண்டத் தொழில்

pounce: (வரை.) வண்ணப்பொடி: மை உறிஞ்சுவதற்காகப் பதி வெடுப்புத்துணியின் மேற்பரப்பில் தூவப்படும் வண்ணப்பொடி

pound : பவுண்ட் : 12 அவுன்ஸ் கொண்ட எடை அலகு, .454கி.கி

pour point depressant: (தானி.) பாய்வுச்சேர்மானம் : தாழ்ந்த வெப் நிலைகளில் எண்ணெய் தங்கு தடையின்றிப் பாயும்படி செய்வதற்காக சேர்க்கப்படும் சேர்மானப் பொருள்

powder metallurgy : (உலோ.) தூள் உலோகக்கலை: வெப்புமின்றி அழுத்தத்தின் மூலமாக உலோகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு செய் உலோகத் தூள்களின் ஒரு கலவையை ஒர் ஆழமான வார்ப் படக்குழியில் இட்டு அழுத்தம் செலுத்தி, எளிதில் உடைய கூடிய வலுவற்ற கட்டிகளாக உரு வாக்குகிறார்கள். இக்கட்டிகளை ஒர் உலையிலிட்டு வெந்நீரருவிப் படிவமாக்கி வலுவான பயனுள்ள பொருளாக ஆக்குகிறார்கள்

power : (மின்.) மின்விசை : மின் விசையின் அலகு வாட் மின் விசையினால் இயக்கத்தின்போது செய்யப்படும் வேலையின் விகிதத்தைக் கொண்டு இது அளவிடப்படுகிறது எந்திரவிய்லில் விசை= (இயக்குத்திறம் x தொலைவு) / காலம்

power amplifier: திறன்மிகைப்பி: ஒலிபெருக்கிக்குப் பெருமளவு விசையை அளிக்கப் பயன்படுத்தப் படும் ஒரு வகை மின் கருவி

power brakes : (தானி; எந்.) விசைத் தடை : மின்னியக்கச் செறிவு முறை மூலம் நீரியல் முறையில் இயக்கப்படும் தடை

power factor : ( மின்.) திறன்கூறு : உண்மைத் திறனுக்குமிடையிலான,தோற்றத் திறனுக்குமிடையிலான விகிதம் திறன் கூறு = (உண்மைத்திறன்(W) / தோற்றத்திறன் (WXA))

power factor meter : ( மின்.) திறன் கூறு மானி : மின் திறன் கூற்றின் மதிப்பளவைக் காட்டக் கூடிய மின்னோட்ட மானி, மின்னழுத்த மானி திறனளவி ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த ஒர் அளவைக் கருவி

power feed: ( எந்..) : விசையூட்டம்: கடைசல் எந்திரம் திருகிழை வெட்டுக்கருவி போன்ற எந்திரங்களுக்குத் தானியக்க முறையில் உட் செலுத்துதல்

power hammer: விசைச் சம்மட்டி:காற்று, நீர் எந்திரவிசை மூலம் இயக்கப்படும் சம்மட்டி கரைசல் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது