பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
497

power landings (வானூ.) விசை இறக்கம் : விமான எஞ்சினின் நீராவிிப் புழையின் வாயடைக்கப் பெற்று மெல்ல இயங்குமாறு செய்து விமானத்தைத் தரை இறங்கச் செய்தல்

power loss : (மின்.) மின் விசை இழப்பு : மின் கடத்திகளில் ஏற்படும் தடை காரணமாக ஒரு மின் சுற்றுவழியில் உண்டாகும் மின் விசை இழப்பு

power pack : (மின்.) திறன் அடைப்பு : வானொலிப் பெட்டி, பொது ஒலிபெருக்கி அமைப்பு முதலியவற்றுக்குத் தேவையான மின்னிழையை அல்லது வெப்ப ஆற்றலை வழங்கும்

power plant ; (தானி. ) விசை எந்திரம் :எரிபொருள் கரியச் சேர்மானச்செறிவு, எரியூட்டம், குளிர்விப்பு, மசகிடுதல் போன்றவற்றுக்கான அமைவுகள் அமைந்த எந்திரம்

எந்திரவியலில் மின்விசையை உற்பத்தி செய்து, வழக்கீடு செய்வதற்கான கொதிகலன்கள், மின்னாக்கிகள் முதலியவை

power sensitivity :(மின்..) (மின்னுணர் திறன்: வலைச்சைகை மின்னழுத்தத்தின் உள்ளபடியான மதிப்பளவின் வர்க்கத்தில் வாட்டுகளில் மின்விசை வெளிப்பாட்டு அளவின் விகிதம்

power steering : (தானி;எந்.) விசை இயக்காழி : எஞ்சின் இயங்கும்போது சுதந்திரமாக இயக்குவதற்கு அனுமதிக்கும் இயக்காழி. இது இயக்காழி அலகுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னியக்கச் செறிவின் மூலம் நீரியல் முறையில் இயக்கப்படுகிறது

power transformer : (மின்.) விசை மின் மாற்றி : உயர்ந்த மின்னழுத்தத்தையும் குறைந்த மின்னோட்டத்தையும் உயர்ந்த மின்னோட்டத்துடனும், குறைந்த மின்னழுத்தத்துடனும் இணைப்புதற்கும், குறைந்த மின்னழுத்தத்தையும், உயர்ந்த மின்னோட்டத்தையும் உயர்ந்த மின்னழுத்தத்துடனும், குறைந்த மின்னோட்டத்துடனும் இணைப்பதற்கான ஒரு சாதனம். இவை பொதுவாக 60 சுழற்சி அலைவெண்ணுடன் பயன்படுத்தப்படுகிறது

power transistor : (மின்.) விசை மின் பெருக்கி : ஒரு குறிப்பிட்ட அளவு மின் விசையினை வெளிப்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள மின்விசைப் பெருக்குக் கருவி (டிரான்சிஸ்டர்)

power tube : விசைக் குழல்: ஒலி அலைவெண் மிகைப்பியல். கடைசிக் கட்டத்தில் பயன்படுத்தப்படும் வெற்றிடக்குழல், ஒலி பெருக்கி இயக்கத்திற்கு இது பெரிய அளவிலான ஒலி அலைவெண் அளிக்கிறது

power unit : (மின்.) மின் விசை அலகு : மின் சுற்று வழிகளில் மின் விசையின் அலகு வாட் . இது வினாடி ஒன்றுக்கு வேலை ஊக்க ஆற்றலின் ஒர் அலகு செயற்படும் வீதம் ஆகும்

practice: தொழில் முறைப் பணி : வழக்கறிஞர், மருத்துவர் ஆகியோரின் தொழில் முறைப்பணி

preamplifier: (மின்.) தாழ்நிலை மின் மிகைப்பி: தரஅள்வு மின் மிகைப்பியை இயக்குவதற்குப் போதுமான அளவு ஆற்றல் வெளிப்படுத்தக்கூடிய மின் உணர்வுள்ள குறைந்த அளவு மின் மிகைப்பி

precipitate : ( குழை.).) வீழ்படிவு : வேதியியல் மாற்றம் காரணமாக ஒரு கரைசலில் கரையாத வண்டலாகப் படியும் மண்டிப்படிவு