பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

precision blocks : (உலோ.) துல்லிய எஃகுப்பாளங்கள்: தொழில் துறையில் அளவுத்திட்ட முறையில் பயன்படுத்தப்படும் துல்லியமாகச் செய்யப்பட்ட எஃகுப் பாளங்கள். இது, அங்குலத்தில் 20 இலட்சத்தில் ஒரு பகுதி அளவு வரைப் பல்வேறு வடிவளவுகளில் தயாரிக்கப்படுகிறது

precision grinding: (எந்.) துல்லியச் சாணை: எந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டளவு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடி எந்திரச் சாணை

precision lathe : (எந்.) துல்லியக் கடைசல் எந்திரம் : துல்லியமான கடைசல் வேலைப்பாடுகளைச் செய்வதற்கேற்ற சிறிய மேசைக் கடைசல் எந்திரம்

recooler : (குளி.பத.) குளிர்விப்புச் சாதனம் : கனிகள், காய்கறிகள் போன்றவற்றைக் கப்பலேற்றுவதற்கு முன்பு, அவற்றிலிருந்து உணர் வெப்பத்தை அகற்றுவதற்கான ஒரு குளிர்விப்பு சாதனம்

prefabricated : முன்னிணைப்பு : கட்டிடங்கள் அல்லது தொழிற்சாலைக்கு வேண்டிய பகுதிகளை அல்லது_உறுப்புகளை தனித்தனியாக வேறிடங்களில் முழுமையாக உருவாக்கி, பயன்படுத்த வேண்டிய இடத்திற்குக் கொண்டுவந்து இறுதியாக ஒருங்கிணைத்து அமைத்தல்

preforming (குழை.) முன்னுரு வாக்கம் : பிளாஸ்டிக் தொழிலில் வார்ப்படங்களை விரைவாகவும் மிகக் குறைந்த சேதாரத்துடன் உருவாக்கும் வகையில் வார்ப்படப் பொருட்களை செறிவுடையதாக்கும் முறை

preheat : (குளி.பத.) முன்வெப்ப மூட்டுதல் : (1) பிற செய்முறைகளுக்கு ஆயத்தமாக காற்று, திரவம், உலோகம் போன்றவற்றுக்கு முன்னதாகவே வெப்பமூட்டுதல். ஓர் உலோகத்தை ஒரு செய்முறைக்கு உட்படுத்துவதற்கு முன்பு, அந்த உலோகத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெப்ப மூட்டுதல்

preignition : (தானி.) முன்னிடு வெடிப்பு :உள்வெப்பாலை எரி பொருளின் உரிய நேரத்திற்கு முற்பட்ட வெடிப்பு சூடான கார்ப்ன் படிவுகளாலோ, தவறான எரியூட்டத்தினாலோ இது நிகழலாம்

pressed prick : (க.க.) அழுத்தச் செறிவுச் செங்கல் : கட்டிடங்களில் வெளியே தெரியும் பரப்புகளுக்குப் பயன்படக்கூடிய நன்கு அழுத்தித் தயாரிக்கப்பட்ட உயர்தரச் செங்கல்

pressed steel : (உலோ.வே.) வடிவமைப்பு எஃகு : எஃகுத் தகடுகள் அல்லது படிவங்கள் மூலம் அழுத்தங் கொடுத்துப் பளபளப்பாக வடிவமைத்த பல்வேறு பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இவை வடிவமைத்த எஃகு எனப்படும்

press room : (அச்சு.) அச்சடிப்பு அறை : அச்சடிக்கும் பணி நடைபெறும் அறை

pressing : (மின்.) அழுத்தத் தயாரிப்பு : இசைத் தட்டுகளை அழுத்த வார்ப்படம் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒரு தயாரிப்பு முறை

pressure : (மின்.) மின்வலி இயலாற்றல் வேறுபாடு : மின்னியக்க விசை. இது பொதுவாக மின்னழுத்தம் எனக் கூறப்படும்

இயற்பியலில் ஒர் அலகு பரப்பளவில் விசையழுத்தம்

prssure airship : (வானூ.) அழுத்த விண்கலம் : முழுமையாக