பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
499

வோ பகுதியாகவோ உள்ளழுத்தம் மூலம் தனது வடிவத்தை பேணிக்கொள்ளும் விண்கலம்

pressure altitude ; (வானூ.) அழுத்த உயரம் : ஒரு தரநிலைப் படுத்திய வாயு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட அழுத்த நிலைக்கு நேரிணையான உயரம்

ஒரு விண்கலத்தில் வாயுப் பைகள் முழுமையாக நிரம்பியிருக்கக் கூடிய உயரம்

pressure, atmospheric : ( குளி.பத.) வாயு மண்டல அழுத்தம் : பூமியின் மேற்பரப்பில் அதன் வாயுமண்டலம் காரணமாக ஏற்படும் அழுத்தம். இது 32°F வெப்ப நிலையில் பாதர்சத்தின் 29.921 அங்குலத்திற்கு 76செ.மீ. சமம்

pressure cable : அழுத்த வடம்

pressure, critical : (குளி.பத.) முட்டு அழுத்தம்: முட்டுபதனுக்கு நேரிணையான ஆவி அழுத்தம்

pressure, drop : (குளி.பத.) அழுத்த வீழ்ச்சி : உராய்வு காரணமாக ஒரு குழாயின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குச் செல்லும் போது அழுத்தத்தில் இழப்பு ஏற்படுதல்

pressure, dynamic : (குளி.பத.) இயக்க அழுத்தம் : ஒரு நீர்ம அமைப்பில் ஒரு அளவீட்டு நிலையில் நிலையழுத்தம் வேக வீத அழுத்தம் இரண்டின் கூட்டுத்தொகை

pressure, gauge :(குளி.பத.) தரமதிப்பு அழுத்தம்: வாயுமண்டல அழுத்தத்திற்கு அதிகமான அழுத்தம்

pressure nozzle: (வானூ.)அழுத்தக் கூம்பலகு: காற்றில் விமானத்தின் வேகத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அளவிடு கருவி

pressure reducing :அழுத்தக் குறைப்பு : விசை நோக்கங்களுக்காக மிக உயர்ந்த அழுத்தத்தில் கொதிகலன்கள் இயக்கப்படும் வெப்பமூட்டும் அமைப்புகளில் நீராவி அழுத்தத்தைக் குறைப்பதற்கான சாதனம்

pressure welding : அழுத்தப் பற்றவைப்பு : ஆழுத்தத்தின் மூலம் பற்றவைப்பு செய்யக்கூடிய பற்றவைப்பு முறை

pressurized capsule : (விண்.)அழுத்தக் கூண்டு: சுற்றியுள்ள காற்றின் அழுத்தத்தைவிட அதிக அழுத்தமுள்ள வாயுவைத் தனக்குள் கொண்டுள்ள ஒரு கூண்டு

pressurized suit : (விண்.) அழுத்தமூட்டும் ஆடை : உடலின் சுவாசமும். இரத்த ஒட்டமும் இயல்பான முறையில் தொடர்ந்து நடைபெறும் வகையில் உடலின் மீது அழுத்தம் செலுத்தக் கூடியவாறு வடிவமைககபபட்ட ஆடை

pressure-rigid airship: (வானூ.) அழுத்த - கட்டிறுக்க வான்கலம் : கட்டிறுக்கமான வான்கலத்திலும் கட்டிறுக்கமற்ற வான்கலத்திலும் பயன்படும் தத்துவங்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் ஒரு வான்கலம். வடிவத்தையும் தோல் விறைப்பையும் பேணுவதற்கு இது உதவுகிறது

prick punch : (எந்.) ஊசித்துளை: ஒரு சிறிய மையத்துளை. இதனை

'அமைப்புத் துளை' என்றும் கூறுவர்

primary : (மின்.) குறைமின் சுற்று வழி: குறைந்த அழுத்த (6 ஒல்ட்ஸ்) மின் சுற்றுவழியைக் குறிக்கிறது