பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

508

பொருள். பல நாடுகளில் இரும்பு போன்ற கரு நிறத்தில் கிடைக்கிறது. இது உலோக மாங்கனிஸ் தயாரிக்கப் பயன்படுவதுடன், மின்கலங்கள் வண்ண உலர்த்திகள் ஆயகிவற்றில் பயன்படுகிறது

pyrometer : உயர் வெப்பமானி : உயர்ந்த வெப்பங்களைத் தொலைவிலிருந்து அளப்பதற்கான கருவி. இரண்டு உலோகங்கள் இணையும் இடத்தில் மின்னோட்டம் ஏற்படுகிறது என்னும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது

pyroxylin : (வேதி.) பைரோக்சிலின் : வண்ணநெய், செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள். இது எளிதில் தீப்பற்றக் கூடியது; வெடிக்கத்தக்கது. ஒளிப் படச் சுருள்கள் தயாரிப்பதில் பயன்படுகிறது