பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
509
Q


Q : (மின்.) கியூ : தரம்; தர அளவு காந்தப் புலத்தின்போது ஒரு தூண்டு கருவியில் சேமித்து வைக்கப்படும் ஆற்றலுக்கும் அதே நேரத்தில் ஏற்படும் இழப்பீட்டுக் கிடையிலான விகிதம்

q demodulator : (மின்.) கியூ எதிர் அலைமாற்றி : வண்ணத் தொலைக்காட்சியில், சதுரச் சரியீட்டளவு வண்ண ஒளிர்வு ஊடகங்களை மீண்டும் 'கியூ' துணை ஊடகங்களாக மாற்றுகிற எதிர் அலை மாற்றி மின் சுற்றுவழி

q factor : (மின்.) கியூ காரணி : ஒரு மின் சுற்றுவழியின் போது தூண்டப்பட்ட மின்னழுத்தத்தின் மதிப்பளவினை அதிகரிப்பதற்கான மின் சுற்று வழியின் திறனை இது குறிக்கிறது

q-signal : (தொ.கா.) கியூ சைகை: வண்ணத் தொலைக்காட்சியில் பச்சை அல்லது கருஞ்சிவப்பு வண்ணத் தகவல்களைக் கொண்டுள்ள தொலைக்காட்சிச் சைகை

quad : (அச்சு.) இட அடைப்பு எழுத்துரு : அச்சுத் துறையில் இடி அடைப்புக் கட்டையாகப் பயன்படும் எழுத்துரு. இது அச்சு எழுத்துருவின் உயர்த்தைவிடக் குறைவான உயரத்துடன் இருக்கும்.இது அச்சுவரி நீளங்களின் மடங்குகளாக வார்க்கப்படும். பத்திகளில் முடிவில் வரிகளிடையே இடைவெளியை அகலமாக்குவதற்கும், ஓர இடம் விடுவதற்கும் இது பயன்படுகிறது

quadrangle : (க.க.) நாற்கட்டரங்கம் : கல்லூரி விளையாட்டுத்திடல்போன்று நாற்புறமும் கட்டங்கள் சூழ்ந்த சதுரமான அல்லது நாற்கட்டமான இடப்பரப்பு

நாற்கட்டு அரங்கம்

quadrant : (1) கால் வட்டம் : செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; வட்டக்கால் சுற்று வரை

(2) கோண மானி : உயரங்களை அளவிடப் பயன்படும் கருவி

quadratic equations : (கணி.) இருவிசைப்படிச் சமன்பாடு : அறியப்படாத ஓர் அளவின் இருமடி வர்க்கத்தை மட்டும் கொண்டுள்ள ஒரு சமன்பாடு, உருக்கணக்கியலில் இரு விசைப் படிமை சார்ந்துள்ள சமன்பாடு

quadrilateral : நாற்கரம் : நான்கு பக்கங்களையும் நான்கு கோணங்களையும் உடைய வரை வடிவம்

quadruplane : (வானூ.) நாற்சிறகு விமானம் : ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு தொகுதி சிறகுகளையுடைய ஒரு வகை விமானம்

quadruple-expansion engine : நான்மடி விரிவாக்க எஞ்சின் : நீராவி நான்கு மடங்காக விரிவாக்கமாவதற்கு இடமளிக்கும் ஒரு வகைக்கூட்டு எஞ்சின். முதலில் ஓர் உயர் அழுத்த நீள் உருளையிலும், பின்னர் அடுத்தடுத்து மூன்று குறைந்த அழுத்த நீள் உருளைகளிலும் இந்த விரிவாக்கம் நடைபெறும். இதில் தொடக்கத்தில் நீராவி அழுத்தம் குறைந்தது