பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

510

,91கிலோ அளவுக்கு இருக்க வேண்டும்

quantitative analysis : (வேதி.) பண்பியல் பகுப்பாய்வு : வேதியியல் பொருளில் என்னென்ன தனிமங்கள் அல்லது கூறுகள் எந்த அளவுகளில் அடங்கியுள்ளன என்பதை அறிவதற்கான பகுப்பாய்வு

quantity : தரநிலை : (1) பண் புத்தரம். (2) தனி இயல்பு அல்லது குணம்

quanta : (மின்.) உகைப்பளவு : ஓர் எலெக்ட்ரானை அதிக அளவு ஆற்றலுக்கு உயர்த்துவதற்குத் தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றல்

quantitative analysis : (வேதி.) அளவைப் பகுப்பாய்வு : ஒவ்வொரு தனிமத்தின் அல்லது கூறின் மொத்த அளவினைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு

quantity : அளவு : கூடவோ குறையவோ கூடிய பொருண்மை, கன அளவு எண்ணிக்கை போன்ற இயல்பின் அளவீடு

quantum : (தானி.) எண் அலகு : ஓர் அளவீட்டு முறையில் மிகச் சிறிய அலகினைக் குறிக்கும் எண் மதிப்பளவு

quantum : (மின் ) இயற்பியல் அலகு : இயங்கு விசை, ஆற்றல், பொருண்மை முதலிய இயற்பியல் பண்புகளின் மிகச்சிறிய மதிப்பளவு

quantum theory : (இயற்.) கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடு : ஒரு சூடான பொருளிலிருந்து அல்லது விளக்கிலிருந்து ஒரு சீரான அளவில் பாயாமல், எண் அலகு எனப்படும் ஆற்றல் துளிகளாகக் கதிரியக்கமாக வெளிப்படும் ஆற்றலின் அளவு, இந்த அளவுகள், கதிரியக்கத்தின் அலை வெண்களுக்கேற்ப, பல்வேறு அளவுகளில் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு வெப்பு ஒளியின் எண் அலகு, ஓர் ஊதா ஒளியின் எண் அலகைவிடக் குறைவாக இருக்கும்

quarantine : (நோயி.) தொற்றுத்தடைக் காப்பு : பயணிகள், கப்பல் நோயாளிகள் ஆகியோரைத் தொற்றுத் தடைக்காப்புக்காக ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தொற்றுத் தடைக்காப்பில் வைத்தல்

quarry : (1) கற் சுரங்கம் : உடைத்தல், வெடித்தல் மூலம் கற்கள் எடுக்கப்படும் தொடுகுழி. 2) சன்னல் கண்ணாடி : நூல்களை வைப்பதற்கான சன்னல் முகப்புகளையுடைய 18ஆம் நூற்றாண்டு நூல் பேழை

quarry-faced masonry : ( s.s. ) பாவுகல் முகப்புக் கட்டுமானம் : கற் சுரங்கத்திலிருந்து எடுத்து. மெருகேற்றப்படாமல் அப்படியே பதித்த கல் முகப்புடைய கட்டுமானம்

quarry tile : (க.க.) உலா மேடை ஓடு : எந்திரத்தினால் செய்யப்பட்ட மெருசிடப்படாத ஓடு. இது 3/4 அல்லது அதற்கு மேற்கனமுடையதாக இருக்கும்

quart : முகத்தலளவை அலகு : கால் காலன் அல்லது இரண்டு பைண்டு அளவு. கால்காலன் அளவு கலம்

quartam mafaria : (நோயி.) நான்கு நாள் முறைக் காய்ச்சல் : நான்காம் நாள்தோறும் விட்டு விட்டு வரும் மலேரியாக் காய்ச்சல் வகை quarter : கால் பங்கு : ஒரு பொருளின் நான்கு சமமான பகுதிகளில் ஒன்று. கவராயத்தின் நான்கு முக்கிய முனைகளில் ஒன்று