பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
511

quartile : கோள் இடைத்தொடர்பு : ஒன்றுக்கொன்று 90° இடைத் தொலைவுடைய இரு கோளங்களிடையிலான இடைத்தொடர்பு

quarto : (அச்சு.) நான்கு மடித்தாள் : நான்கு தாள்களும், எட்டுப் பக்கங்களும் அமையும் வகையில் இரு தடவை மடித்தாளின் அளவு. நான்மடித்தாள் அளவுள்ள ஏடு

quartz : படிகக்கல் : கன்ம ஆக்சிஜனுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்

quartzite : (மண்.) படிகக்கல் தாது : உருத்திரிபடைந்த மணற்பாறை. பெரும்பாலும் படிகக்கல் கொண் அடர்த்தியான குருணை வடிவக்கல்

quaternary Steel : (உலோ.) நாற் தனிம எஃகு : இரும்பு, கார்பன், மற்றும் இரு சிறப்புத் தனிமங்கள் அடங்கிய ஒரு வகை எஃகு உலோகக் கலவை

quaternion : நான்கன் தொகுதி : ஒரு தடவை இரண்டாக மடித்த நான்கு தாள்களின் தொகுதி

quatrefoil : (க.க.) நாற்கதுப் பணி : நான்கு இலை மலர் வடிவத்தில் செய்யப்படும் அணி வேலைப்பாடு

queen closer : (க.க.) அரைச் செங்கல் : (க.க.) செங்கல்லை நீளவாக்கில் இரண்டாக வெட்டிச் செய்த செம்பாதிச் செங்கல்

queen truss : (க.க.) அரசித் தாங்கணைவு : செங்குத்தான இரு கட்டுக் கம்பங்களுடன் கட்டமைப்பு செய்த ஒரு தாங்கணைவு. ஒரே யொரு கட்டுக்கம்பம் உடைய அரசுத் தாங்கணைவிலிருந்து இரு வேறுபட்டது

quenching : (எந்.) குளிர்விப்பு : எஃகைப் போதிய அளவு கெட்டிப்படுத்துவதற்காகச் சூடான எஃகை நீர், எண்ணெய் அல்லது வேறு திரவங்களில் நனைத்துக் குளிர்வித்தல்

quenching oils : குளிர்விப்பு எண்ணெய் : சூடாக்கிக் குளிர்வித்துக் கெட்டிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள். மீன் எண்ணெய் இதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.கனிம மீன், தாவர, விலங்கு எண்ணெய்கள் கலவை செய்யப்பட்டு வாணிகப் பெயர்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன

quick change : (எந்.) துரித மாற்றம் : கடைசல் எந்திரங்களில் பல்லிணைகளை அகற்றி மாற்றுவதற்குப் பதிலாக நெம்பு கோள்களை இடம் பெயரச் செய்வதன் மூலம் ஊட்டத்தை மாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் பல்லிணைகளை அமைத்தல்

quick-charge : (மின்.) வேக மின்னேற்றம் : மின்னேற்ற வேகத்தை அதிகரிப்பதன் மூலம் சேமக் கலத்திற்கு மறு மின்னூட்டம் செய்தல்

quicklime : (க.க.) நீற்றாத சுண்ணாம்பு : தூய்மையான சுண்ணாம்புக் கல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட நீற்றாத சுண்ணாம்பு

quicksand : உதிர்மணல் : ஒரு கனமான பொருளின் அளவுக்கு நீருடன் கலந்த உதிரிமணல்

quicksilver : (உலோ.) பாதரசம் : பாதரசம் என்ற திரவ உலோகம். முகம் பார்க்கும் கண்ணாடிகளின் பின்புறம் பூசப்படும் வெள்ளீயரசக்கலவை

quill : (எந்.) புழைத்தண்டு : உட்புழையுள்ள சுழல்தண்டு கதிர் quill gear : (எந்.). புழைப் பல்லிணை : ஒரு புழைத்தண்டில் அல்