பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

514

radial bearings : (தானி.) ஆரத்தாங்கி : நீள் உருளைகளுடன் அல்லது பீப்பாய் வடிவ உருளைகளுடன் கூடிய தாங்கி

radial drill: (உலோ.) ஆரத்துரப்பணம்: ஒரு தூணின் ஆதாரத்தின் மீது ஆரம் போன்ற கரத்தில் ஏற்றப்பட்ட ஒரு துரப்பணம்

radiol drilling machine: (எந்.) ஆரைத் துரப்பண எந்திரம்: ஒரு கனரகத் துரப்பண எந்திரம். துரப்பணம் செய்யப்படும் பொருளை நகர்த்தாமல் துரப்பணத்தின் நிலையைச் சரி செய்யக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருக்கும்

radial engine : (வானூ.) ஆரை எஞ்சின்: நிலையான நீள் உருளைகள் ஒரு பொதுவான வளைவுச் சுழல் தண்டினைச் சுற்றி ஆரை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்

radian: (மின்.) ஆரைக்கோணம்: ஆரையின் வட்டச்சுற்று வரை மீது ஆரை நீளக் கூறுகொள்ளும் கோணம். ஒரு வட்டத்தின் சுற்றளவு 2π ஆரைக் கோணங்களுக்குச் சமம். ஒரு ஆரைக்கோணத்தின் அளவு ஏறத்தாழ 57°

radiant heat: (இயற்.) தாவு வெப்பம்: மையத்தினின்றும் நாற்றிசையிலும் வெப்பம் தாவிச் சென்று பரவுதல்

radiating surface: கதிர்வீச்சுப் பரப்பு: வெப்பக் கதிர்களை வீசிப் பரப்புகிற பரப்பு

radiation (எந்.பொறி.) வெப்பக் கதிர்வீச்சு: வெப்பக்கதிர் வீசிப் பரவுதல. அணுக்கதிர்வீச்சு அணுத் துகள் அல்லது கதிர்கள் மிக வேகமாக வீசிப் பரவுதல்

radiation loss: (மின்) கதிர் இழப்பீடு : மின்னியல் மற்றும் காத்தவியல் புலங்களில் கதிர்வீச்சு காரணமாக அனுப்பும் கம்பிகளில் இழப்பு ஏற்படுதல்.

radiation resistance: (மின்.) கதிர்வீச்சுத் தடை: ஒரு வானலை வாங்கியிலிருந்து ஆற்றல் கதிர்வீச்சின் விளைவாக, அதில் ஏற்படும் தடை.

radiator: (எந்.பொறி.) வெப்பாற்றுப் பொறி: உந்துவண்டிப் பொறியின் வெப்பாற்றும் அமைவு.

radiator hose: (தானி.) வெப்பாற்றுப்பொறி நெழிவுக் குழாய் : உந்து ஊர்தியில் வெப்பாற்றுப் பொறியினையும், எஞ்சினையும் இணைக்கும் நெளிவுக் குழாய்.

radical: (கணி.) விசைமூலஅளவு: எண்களின் வர்க்கமூலம் தொடர்பான அளவு. மூல உறுப்பு- சேர்மத்தின் அடிப்படைக் கூறாக அமைத்து சேர்மத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போது மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது தனி அணு அல்லது அணுக்களின் கூட்டம்.

radio: (மின்.) வானொலி: கம்பியில்லாச் செய்திப் பரப்பு; கம்பியில்லாச்செய்தி வாங்கும் அமைவு: வானொலிப்பெட்டி, வானொலி ஒலி பரப்பு.

radio acoustics:(மின்) அலை ஒலியியல் : ஒலி அலைகளை அனுப்புதல், உண்டாக்குதல், பெருக்குதல் பற்றி ஆராய்தல்.

radioctive: (மின்.) கதிரியக்கமுடைய: பொருட்கள் நேர் மின்னேற்றமும், எதிர் மின்னேற்றமும் உடைய துகள்களை வெளியிடுதல்.

radioctivity: (வேதி.) கதிரியக்கம்: ஒருவகை அணு இன்னொரு வகை அணுவாக மாறும்போது எற்படும் மாறுதல். இந்த மாற்றத்