பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
519

இயக்கப்படும் இரு துரப்பணம். இதன் ஒரு முனையில் ஒரு துரப்பணப்பிடி அமைந்திருக்கும். இது ஒரு வழித்தடப் பற்சக்கரம். அடைதாழ் மூலம் சுழலக் கூடியது

rachet wheel : ஒரு வழித் தடைப்பற்சக்கரம் : ஒரு வழிப் பற்சக்கரத் தடை அமைக்கப்பட்ட சக்கரம்

rated horse power of an engine : (வானூ.) விசை மானம்: ஒரு குறிப்பிட்ட வகை எஞ்சினின் வேக அளவு கணிக்கப்பட்டிருந்து, அது முழுவேகத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட உயரத்தில் அல்லது பெருகிய அழுத்தத்தில் இயங்கும் போது உண்டாகும் சராசரிக் குதிரை விசை

rated revolutions : (வானூ.) சுழற்சி வேகம் : விசைமானத்திற்கு இணையான சுழற்சிகளின் எண்ணிக்கை

rate of climb : (வானூ.) : ஏறுமுக வேகம்: ஒரு விமானம் காற்றை எதிர்த்துச் செங்குத்தாக ஏறும் வேக வீதம்

rate - of - climb indicator: (வானூ.) ஏறுமுக வேகமானி : ஒரு விமானம் உயரே ஏறுகிற அல்லது உயரத்திலிருந்து இறங்குகிற வேக வீதத்தைக் காட்டும் கருவி

rate of speed : (எந்.) வேக வீதம்: எந்திர வேலைகளில் வேக வீதம் ஒரு நிமிடத்தில் சுழற்சிகளின் எண்ணிக்கை அல்லது ஒரு நிமிடத்தில் அடி என்ற அளவில் கணக்கிடப்படுகிறது

rating of alternators : (மின்.) மாறு மின்னாக்கி வேகம் : மாற்று மின்னோட்டம் உற்பத்தி செய்யும் மின்னாக்கிகளின் வேகம் கிலோ வால்ட் ஆம்பியர்களில் (KWA) கணக்கிடப்படுகிறது. இது ஆம்பியர் அளவினை மின்னழுத்தத்தின் மடங்குகளாகப் பெருக்கி ஆயிரத்தால் வகுத்துப் பெறப்படுகிறது

ratio : வீதத் தொடர்பு: ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட்டிய தொடர்பு

ratio of compression: (குளி.பத.) அழுத்த வீதம் : அழுத்தத்திற்கு முன்பும் பின்பும் அழுத்தங்களிடையிலான வீதம்

ratio of transformation : மின் மாற்று வீதம் : ஒரு மின்மாற்றியில் முதனிலைச் சுருளிலுள்ள சுழல் எண்ணிக்கைக்குமிடையிலான வீத அளவு

rawhide : பதனிடாத் தோல் : பதனிடப்படாத தோல்

rawhide gears : (எந்.) தோல் பல்லிணை : இறுக்கமாக அழுத்தப்பட்ட பதனிடப்படாத தோல் வட்டுகளினாலான ஓசை எழுப்பாத பல்லிணை

rawhide hammer : தோல் சுத்தி : பதனிடப்படாத தோல் கொண்டையுடைய கைச்சுத்தி. உலோக உறுப்புகளில் இச்சுத்தியைப் பயன்படுத்தும் போது அந்த உறுப்புகளில் கீறல்கள் ஏற்படாமல் இருக்கும்

raw material : மூலப்பொருள் : செய்பொருளுக்குரிய மூல இயற்கைப் பொருள்

raynauds disease : (நோயி.) ரேனாட்ஸ் நோய் : விரல்களுக்கும் சில சமயம் காதுகளுக்கும் கீழ்த் தாடைக்கும் இரத்தம் செல்வதில் ஏற்படும் கோளாறு. பெரும்பாலும் 50 வயதான பெண்களுக்கு மாத விடாய் சமயத்தில் இந்நோய் உண்டாகும்