பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
525

relative humidity: சார்பு ஈரப்பதன்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், காற்றில் இருத்தி வைத்துக் கொள்ளக்கூடிய மொத்த ஈரப்பதன் அளவுக்குமிடையிலான வீத அளவு

relative inclinometer: (வானூ.) சார்புச் சாய்வுமானி: விமானம் பறக்கும் உயரத்தை வெளிப்படைப் புவியீர்ப்பு அடிப்படையில் காட்டும் ஒரு சாதனம். விமானத்தின் முடுக்கு விசை, புவியீர்ப்பு விசை இவற்றின் கூட்டு விளைவாக்கம்

relative motion: (இயற்.) சார்பு இயக்கம்: ஒரு பொருளைச் சார்ந்து இன்னொரு பொருள் இயங்குதல்

relative resistance: (மின்.) தொடர்புத்தடை: வெள்ளியுடன் ஒப்பிடும் போது ஒரு பொருளின் ஒப்பீட்டுத்தடையின் மதிப்பளவு. வெள்ளிக்கு ஒப்பீட்டுத்தடை மதிப்பளவு 1.0

relativistic: (விண்.) இடையுறவுப் பொருள்: ஒளியின் வேகத்தில் கணிசமான பின்னப்பகுதி வேகத்தில் இயங்கும் பொருள். அணுவின் உட்கூறமைவுள்ள துகள்கள் இந்த வகையினம்

relative wind: (வானூ.) தொடர்புக் காற்று : காற்றிலுள்ள ஒரு பொருளைப் பொறுத்து காற்றின் வேக வீதம். காற்றின் மீது பொருளின் இடையீட்டு விளைவு அற்பமாக இருக்கும் அளவுக்கான தூரத்திலிருந்த எடுக்கப்பட்ட அளவீடுகளிலிருந்து இது நிருணயிக்கப்படுகிறது

relay (மின்.) துணைமின் விசையமைவு: ஒரு முதன்மை மின்சுற்று வழியில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஓர் உள் சுற்று வழியை உண்டாக்க அல்லது மூடப் பயன்படும் ஒரு துணைச் சாதனம்

relay station: அஞ்சல் நிலையம்: வானொலி அல்லது தொலைக்காட்சியில், இன்னொரு நிலையத்தின் ஒளி-ஒலி நிகழ்ச்சிகளை வாங்கி அஞ்சல் செய்யும் நிலையம்

relaxation oscillator: (மின்.) தளர்வுறு ஊசல்: இது ஓர் எதிர் (சைன் வடிவ) ஊசல். இதில், ஒரு தடுப்பான் வாயிலாகக் கொண்மிக்கு மின்னூட்டுகிற அல்லது மின்னூட்டத்தை வெளியேற்றுகிற நேரத்தைப் பொறுத்து அலைவெண் அமைகிறது

relay rack: (மின்.) அஞ்சல் சட்டம்: அடிச்சட்டமும் கருவியும் கொண்ட 48செ.மீ.சட்டங்களைத் தாங்கியுள்ள ஓர் எஃகுச் சட்டம்

relief: (பொறி.) புடைப்பு: ஒரு மேற்பரப்பிலிருந்து முனைப்பாக எழுந்து நிற்கும் புடைப்பு

relief map: புடைப்பியல் நிலப்படம்: வண்ண வரைக் குறியீடுகள் மூலம் புடைப்பியல் தோற்றம் அளிக்கப்பட்ட நிலப்படம்

relief printing: (அச்சு.) புடைப்பியல் அச்சடிப்பு: வண்ண வரைக் குறியீடுகளால் அமைக்கப்படும் புடைப்பியல் தோற்ற அமைவுடன் அச்சடித்தல்

relieving: (உலோ.) முனைப் பழிப்பு: உராய்வையும், வெப்பத்தையும் குறைப்பதற்காக ஒரு கருவியின் வெட்டுமுனையின் பின் பகுதியிலுள்ள பொருளை அகற்றுதல்

relieving arch: விடுவிப்பு வில்வளைவு: சுவரின் அடிப்பகுதிப் பளுக் குறைக்கும்படி உள்வரியாகக் கட்ட்ப்படும் வில் வளைவு