பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
527

representative : உருமாதிரி :மிகச் சிறந்த வகையின் அல்லது பாணியின் வகைமாதிரி

reprint : (அச்சு) மறு அச்சுப் பதிப்பு : மூல அச்சுப்பதிப்பு காலியான பிறகு, அதிகத் திருத்தங்கள் இல்லாமல் முன்னயதைப்போல வேறு அச்சுப்பதிப்பாக அச்சிடுதல்

reproducing : மறுபடி எடுப்பு : மீண்டு படி எடுத்தல். திரும்பப் படியெடுத்து வழங்குதல்

reproduction : (அ.க.) (1) படியெடுத்தல் : வேறுபடி உருவாக்கி எடுத்தல், உருவப்படி எடுத்தல் (2) இனப்பெருக்கம் - இனப்பெருக்கமுறுதல் இனம் பெருக்குதல்

reptile press : பணிமுறைசாரா செய்தித்தாள் : பணிமுறைசாராத அரசுச் சார்புடைய செய்தித்தாள்கள்

repulsion : (மின்.) புறவிலக்கு விசை : ஒரே மாதிரியாக மின்னேற்றஞ் செய்யப்பட்ட இரு பொருட்கள் தம்மிடையே ஒன்றையொன்று உந்தித்தள்ளும் ஆற்றல்

repulsion motor : புறவிலக்க மின்னோடி

reredos : பலிபீடத் திரை : பலிபீடத்தின் பின்புறச் சுவரை மறைக்கும் வேலைப்பாடுடைய திரை

reserve cell : (மின்.) சேம மின்கலம் : பயன்படுத்த ஆயத்தமாகும் வரையில் மின்வாய் உலரவைத்திருக்கப்படும் ஒரு மின்கலம்

residual magnetism : (மின்.) எஞ்சு காந்தம் : ஓர் இரும்புத் துண்டிலிருந்து காந்தவிசை நீக்கப்பட்ட பிறகு அதில் எஞ்சியிருக்கும் சிறிதளவு காந்தவிசை

residue (தானி.) எஞ்சுபடிவு : எரித்த பிறகு படிந்திருக்கும் எச்சப் பொருள்

resilience : எதிர் விசைப்பு : வில் போல் நிமிர்ந்து எதிர்த்தடிக்கும் செயல் அல்லது ஆற்றல். ஒரு பொருள் நலிந்து தொய்வுற்ற பின்பு மீட்டெழுந்து முன்னுருப் பெறும் ஆற்றல்

resin : பிசின்: சிலவகை மரங்களிலிருந்து எடுக்கப்படும் மரப்பிசின். இது நீரில் கரையாமல் ஆல்ககால், ஈதர் முதலியவற்றில் கரையக்கூடியது

resinoid : (குழை.) செயற்கைப் பிசின் : இயற்கைப் பிசின்களிலிருந்து வேறுபட்ட செயற்கைப் பிசின் பொருட்கள்

resistal : (உலோ.) ரெசிஸ்டால்: மிக உயர்ந்த தரமுடைய துருப்பிடித்காத எஃகு, இதில் காந்தம் ஏறுவதில்லை. இது அமிலத்தை எதிர்க்கக் கூடியது

resistance : (மின்.) தடை : மின்னோட்டம் பாய்வதைத் தடுக்கக் கூடிய ஒரு பொருளின் பண்பு

resistance coil : (மின்.) தடைச்சுருள் : குறிப்பிட்ட அளவு அதிகத் தடையாற்றல் கொண்ட கம்பிச் சுருள். நைக்ரோம் அல்லது இரும்பினாலான இந்தக் கம்பிச் சுருள் மின்னோட்டத்தைக் குறைப்பதற்காக ஒரு மின் சுற்றில் செருகப்பட்டிருக்கும்

resistance unit : (தானி. ) தடை அலகு : எலெக்ட்ரான் பாய்வதை மிகுதியாகத் தடுக்கும் திறன் கொண்ட ஓர் உலோகத்தினாலான ஒரு சிறிய கம்பிச்சுருள் அல்லது ஒரு சிறிய கார்பன் சலாகை. இந்த அலகுகள், உந்து ஊர்தியின் மின்னியல் சுற்றுவழிகளில் மின்னோட்டத்தைக் குறைப்பதற்காகச் செருகப்படுகின்றன