பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
529

ஆற்றலை இருத்தி வைத்துக் கொள்ளும் திறன்

reticule: நுண்வலைப் பின்னல்வரி: தொலை நோக்காடியிலுள்ள காட்சி வில்லையின் நுண்வலைப் பின்னல் வரி

reticulum: (உட.) இரண்டாம் இரைப்பை: அசைப்போடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை

retina: (உட.) விழித்திரை: கண் விழியின் பின்புறத் திரை

retort; வாலை: காய்ச்சி வடித்தலில் பயன்படுத்தப்படும் கீழ் நோக்கி வளைந்த கழுத்துடைய கண்ணாடி வடிகலம்

retrace: மீட்சி: (மின்.) நுண்ணாய்வு செய்யும் மின் கதிர்க் கற்றையானது, ஒரு வரியை நுண்ணாய்வு செய்த பிறகு மீண்டும் தொடக்க நிலைக்கே திரும்புதல்

retractable wheel: (வானூ.) உள்ளிழுப்புச் சக்கரம்: விமானத்தில், உடற்பகுதிக்குள் அல்லது சிறகுகளுக்குள் இழுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சக்கரம்

retrograde motion: (விண்.) பின்னோக்கு இயக்கம் : விண்கோள வகையில் கிழக்கு மேற்காகச் செல்லுதல் கோள் வகையில் சூரியன் நெறியிலே பின்னோக்கிச் செல்வது போல் தோன்றுதல்

retro rocket: (விண்.) பின்னோக்கி உந்து ராக்கெட்: ஒரு பொருளின் வேகத்தைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளின் திசைக்கு நேர் எதிர்த்திசையில் உந்தித் தள்ளுகிற ராக்கெட்

return bend: (பட்.) வளை குழாய்: "U" வடிவில் அமைந்த பொருத்தப்பட்டுள்ள வளைவுக் குழாய்

reveal: (க.க.) பக்கச்சுவர் பரப்பு: கதவு, பலகணி ஆகியவற்றின் உட்புறப் பக்கச் சுவர்ப் பரப்பு

reverberation time: (மின்.) எதிரலை நேரம்: ஒரு குறிப்பிட்ட அலைவெண் கொண்ட ஒலியானது, ஒலி நின்ற பின்பு அதன் தொடக்க மதிப்பளவில் 10 இலட்சத்தில் ஒரு பகுதிக்குக் குறைவதற்குப் பிடிக்கும் நேரம்

reverse curve: மறுதலை வளைவு : "S" வடிவ வளைவு

reverse mould (வார்.) மறுதலை வார்ப்படம்: உள்ளபடியான வார்ப்படத்தைத் திணிப்பதற்குரிய ஒரு மாதிரி வார்ப்படம்

reverse plate : (அச்சு.) மறுதலை அச்சுத்தகடு: கறுப்புப் பின்னணியில் வெள்ளை வடிவங்களைப் பதிவு செய்யும் வகையில் கறுப்பு, வெள்ளை வண்ணங்களை மறுதலையாக அச்சிடக்கூடிய அச்சுத் தகடு

reversed polarity (மின்.) எதிர்த் துருவ முனைப்பு (மின் நேர்முனை): ஆதார உலோகத்திலிருந்து மின் முனைக்கு எலெக்ட்ரான்கள் பாயும்படி செய்கிற நேர் மின்னோட்டம்

reversible propeller; (வானூ.) மறுதலை முற்செலுத்தி : விமானத் தடை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மறுதலை அழுத்தம்