பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

530

விளைவிக்கும் வகையில் விசை மாற்றம் செய்யக்கூடிய முற் செலுத்தி அல்லது சுழலி

reversing gear: (எந்.) மறுதலைப் பல்லிணை: ஓர் எஞ்சினை அல்லது எந்திரத்தை எதிர்த்திசையில் இயங்குமாறு செய்யக்கூடிய பல்லிணை

revolution: (பட்.) சுற்றுகை: ஒரு பொருள் தனது அச்சில் ஒரு முழுமையான சுற்றினைச் சுற்றும் செயல். இது சுழற்சியிலிருந்து வேறுபட்டது. சுழற்சி என்பது ஒரு முழுச்சுற்றினையோ ஒரு சுற்றின் ஒரு பகுதியையோ குறிக்கிறது. சுழல் தண்டின் சுற்றுகை போன்ற ஒரு தொடர்ச்சியான சுழற்சியைச் சுற்று குறிக்கிறது

revolution counter: (எந்.) சுற்றுகை அளவி: ஒரு சுழல் தண்டின் சுற்றுகைகளின் எண்ணிக்கையை அளவிடுவதற்கான ஒரு சாதனம். ஒரு சுழல் தண்டின் முனையில் ஒரு முள்ளினை அழுத்துவதன் மூலம் சுற்றுகையின் எண்ணிக்கையான ஓர் எண் வட்டில் பதிவு செய்யப்படுகிறது

revolutions per minute: சுற்றுகை வேதம்: ஓர் எந்திரம் ஒரு நிமிடத்திற்குச் சுற்றும் வேகத்தின் வீதம்

revolving field: (மின்.) சுழல் புலம்: புலச்சுருள்களும் துருவங்களும் நிலையாக இருக்காமல் சுழன்று கொண்டிருத்தல்

rf pickup; வானொலி அலைவெண் அனுப்பீடு: ஒலி,ஒளிச் சைகைகளின் வானொலி அலைவெண்

RH.(உயி.),ஆர்எச் காரணி:ரீசஸ்' (Rhesus) என்னும் சிறு குரங்கு வகையிலும், மனித இனத்திலும் குருதியின் செங்குருமத்தில் காணப்படும் உறைமம் ஊக்குவிக்கும் கூறு. இது எதிர்ச் செயல்காட்டாத ஆர்எச் காரணி (RH-negative) என்றும், எதிர்ச்செயல் காட்டுகிற ஆர்எச் காரணி (RH-positive) என்றும் இரு வகைப்படும். மனிதரிடையே குருதியில் உறைமம் ஊக்குவிக்கும் கூறு செலுத்தப்படும்போது எதிர்ச்செயல் காட்டாமலிருப்பது எதிர்ச்செயல்காட்டாத ஆர் எச் காரணியாகும். எதிர் செயல் காட்டுவது எதிர்ச்செயல் காட்டும் ஆர்எச் காரணியாகும். பிறக்காத குழந்தையிடம் எதிர்செயல்காட்டும் ஆர்.எச். காரணியும் தாயிடம் எதிர்ச் செயல்காட்டாத ஆர் எச் காரணியும் இருக்குமானால், தாயின் குருதியில் பாதுகாப்பான ஆர் எச் எதிர்ப்புப் பொருள் உண்டாகிறது. இந்தப் பொருள், இரண்டாவது எதிர்ச்செயல் காட்டும் ஆர் எச் காரணியுடைய குழந்தையின் குருதிக்கு எதிராகச் செயற்பட்டு, அக்குழந்தையின் குருதியில் சிவப்பணுக்களை அழித்துவிடக்கூடும். இதனால் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். தாயிடம் எதிர்ச்செயல் காட்டாத ஆர்எச் காரணி இருந்து, அவருக்கு முன்னர் எதிர்ச்செயல் காட்டும் ஆர்எச் காரணியுடையகுருதி செலுத்தப்பட்டிருக்குமானால், இதே விளைவு ஏற்படும்

rheo-stat: (மின்.) தடைமாற்றி :உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு

rheostatic control: (மின்.)தடைமுறைக் கட்டுப்பாடு: ஒரு மின்னகத்தில் வேறுபட்ட மின்