531
தடையின் அல்லது காந்தத் தடையின் மூலம் கட்டுப்படுத்தும் ஓர் அமைவு
rhodium: (உலோ.) ரோடியம்: பிளாட்டினம் குழுவைச் சேர்ந்த திண்ணிய வெண்ணிற உலோகத் தனிமம்
rhomboid: (கணி.) செவ்விணையகம்: எதிரெதிர்ப் பக்கங்களும் கோணங்களும் மட்டுமே சரி சமமாக இருக்கும் இணைவகம்
rhombus: (கணி.) செவ்விணைவகம்: அண்டைப் பக்கங்கள் சரி சமமாகவும், கோணங்கள் விரி கோணங்களாகவும் உள்ள ஒரு இணைவகம்
rib: (உட.) விலா எலும்பு: உடலின் கவிமோட்டு உள்ளறைக்கு ஆதாரமாகவுள்ள எலும்புக்கூட்டின் வில்வளைவான சட்டக உறுப்பு
riddle: (வார்.) சல்லடை: கூலம், சரளைக்கல், கரித்ததூள் முதலியன சலிப்பதற்கான பெரும்படி அரி தட்டு
ridge: (க க.) கூடல் வாய்: இரு சரிவுகள் கூடும் மேல்வரை, நீண்ட மோட்டின் வரை முகடு
ridge pole: (ச.க.) முகட்டு உத்தரம் : கூரை முகட்டு உத்தரம்
ridge roof: (க.க.) முகட்டுக் கூரை: மோட்டுக் கூடல் வாயில் உத்தரங்கள் சந்திக்கும் கூரை
ridge tiles: (க.க.) மோட்டு ஓடு : மோட்டுக் கூடல்வாய் ஓடு
riffler (உலோ.) தக்கப் பள்ளம்: அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக் கொள்ளும் பள்ளம்
'rigging: (வானூ.) கம்பிக் கயிற்றமைவு: விமானத்திலுள்ள கம்பிக் கயிற்றமைவுத் தொகுதி
right angle: செங்கோணம்/நேர்கோணம்: ஒன்றுக்கொன்று செங்குத்தாக நிற்கும் கோடுகளினால் உண்டாகும் 90° கோணம்
right-hand engine: (வானூ.) வலம்புரி எஞ்சின்: விமானத்தில் எதிரே நின்று பார்ப்பவருக்கு வலம்புரியாகச் சுழலும் முற்செலுத்தியினைக் கொண்ட எஞ்சின்
right-hand screw: (உலோ.) வலப்புறத் திருகாணி: கடிகாரம் சுற்றும் திசையில் (வலப்புறமாக) திருப்பும்போது முன்னேறிச் செல்லும் அமைவுடை திருகாணி
right- hand screw : (எந்.) வலம்புரியாணி : வலம்புரியாகச் சுழற்றும் போது முன்னேறும் அடைப்புடைய புரியாணி
right-hand tools: (பட்.) வலக்கைக் கருவி : வலது கையினால் கையாள்வதற்கேற்பச் செய்யப்பட்ட கருவி
right line : நேர்கோடு : இரு புள்ளிகளுக்கிடையிலான மிகக் குறுகிய தொலைவு
rigidity : விறைப்பு : வளைவு நெளிவுக்கு இடந்தராத கட்டிறுக்கத் தன்மை
ring : (கணி.) வளையம் : (1) ஒரே மையத்தைக் கொண்ட இரு சுற்று வட்டங்களிடையில் அடங்கிய சம தள உருவம். (2) சனிக்கோளின் தட்டு வளையம்
ring bolt : வளை மரையாணி : கண்வழியே ஒரு வளையம் கொண்ட கண்மரையாணி
ring cowling : (வானூ.) வளைய மேல் மூடி : வானூர்தியில் வளைய வடிவிலான எந்திர மேல் மூடி. இது காற்றினால் குளிர்விக்