பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

534

roentgen : (மின்.) ரான்ட்ஜென் : காமா கதிர்வீச்சுக் கதிர் படும் பரப்பினை அளவிடும் அலகு

roll : (விண்.) சுழல் வாட்டம்: ஒரு விண்வெளிக் கலத்தின் நீளவாக்கு அச்சின் நெடுகே சுழல்தல் அல்லது ஊசலாடி இயங்குதல்

roll : (தானி.) உருள்வு : சுழலும் பொருளின் சுழல்வான சாய்வாட்டம். நீட்டுப்போக்கான ஓர் அச்சில் ஒரு முழுச் சுழல்வு சுழலுதல்

rolled gołd: பொன் முலாம் உலோகம் : உலோகத்தின் மேலிடப்பட்ட மெல்லிய தங்கத் தகடு

rolled iron : (பொறி.) உருட்டு இரும்பு : உருட்டுதல் மூலம் வேண்டிய வடிவத்தில் செய்யப்பட்ட இரும்புத் தகடுகள்

rolled iron : (பொறி.) உருட்டு இரும்பு : உருட்டு முறையின் மூலம் தேவையான வடிவில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தகடு

roller bearing : (பொறி) உருள் தாங்கி : குண்டு தாங்கிகளில் பயன்படுத்தப்படும் வட்ட எஃகுக் குண்டுகளுக்குப் பதிலாகக் கெட்டிப்படுத்திய எஃகு உருளைகளினாலான தாங்கி

roller chain : உருளைச் சங்கிலி : ஓசையையும், உராய்வையும் குறைப்பதற்காக நீள் உருளைகளினால் அல்லது உருளைகளினால் செய்யப்பட்ட கண்ணிகளைக் கொண்ட சங்கிலி

rolley : பாரப் பொறி வண்டி : நான்கு தட்டை உருளைப் பொறி வண்டி

rolling : (வானூ.) உருள்வு : நீள அச்சுவாக்கில் ஒரு கோணத்தில் இயங்குதல்

rolling friction : (எந்.) உருள்வு உராய்வு : (1) ஒரு கோளவடிவ அல்லது நீள் உருளை வடிவப் பொருள் சமதளப் பரப்பில் உருளும் போது உண்டாகும் தடை (2) ஓர் ஊர்தி சாலையில் ஒடும் போது, சாலையிலுள்ள மேடுபள்ளம் காரணமாக ஏற்படும் தடை

rolling mill : உருட்டு ஆலை : உருட்டுதல் மூலம் இரும்பைத் தகடாக்கு ஆலை

rolling-press : அழுத்துப் பொறி

rolling stock : உருள் ஊர்தி : இருப்புப் பாதைமேல் உருண்டு செல்லும் இயக்கு பொறிகள். வண்டிகள் முதலியவற்றின் தொகுதி

roll titles : (தொ.கா) சுழல் தலைப்புகள் : சுழல் வட்டுருளையிலுள்ள வரிசையான பெயர்ப்பட்டியல், ஒளிப்படக் கருவியின் முன்பு இந்த வட்டுருளை சுழலும்போது இந்தப் பெயர்ப் பட்டியல் தொடர்ச்சியாக நகரும்

roman : (அச்சு.) ரோமன் அச்செழுத்து: எழுத்துருவில் விளிம்பிற்குக் கட்டுருக் கொடுக்கும் நுண் வரைமான முனைப்பாகவுள்ள அச்செழுத்து வகை

roman-esque: (சு.சு.) ரோமானிய பாணி : பண்டைய ரோமானிய ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக் காலத்திய கோதிக் பாணிக்கும் இடைப்பட்ட நிலையில் வில் வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் நிறைந்த சிற்பப் பாணி

roof boards or roofers : (க.க. ) கூரைப் பலகைச் சட்டம் : கூரை ஓடுகளுக்கு அடியிலுள்ள பலகைச் சட்டம்

roof truss : (க.க.) கூரைத்தாங்கணைவு : கூரைக்கு ஆதாரமாக ஒன்று சேர்த்துப் பிணைக்கப் பட்டுள்ள மரத்தினாலான அல்லது இரும்பினாலான ஆதாரக்கட்டு