536
rotary engine : (வானூ.) சுழல் எஞ்சின் : ஆரை வடிவில் அமைக்கப்பட்ட நீள் உருளைகள் கொண்ட ஓர் எஞ்சின். இந்த எஞ்சின் ஒரு நிலையான வணரி அச்சுத் தண்டினைச் சுற்றிச் சுழலும்
rotary induction system : (வானூ.) சுழல் தூண்டல் முறை : ஆரை எஞ்சின்கள் மீது பயன்படுத்தப்படும் எரி-வளி கலப்பித் தூண்டல் முறை. இதில் எரி பொருள் செறிவினை நீர் உருளைகளுக்குப் பகிர்மானம் செய்வதில் ஒரு சுழல் விசிறி உதவுகிறது
rotary press : (அச்சு.) சுழல் அச்சு எந்திரம் : சுழல் முறையில் அச்சுப் பொறி. இதில் அச்சிடும் பரப்பு ஒரு சுழலும் நீள் உருளையு பிணைக்கப்பட்டிருக்கும். ஓர் உருளைச் சுருளிலிருந்து காகிதம் ஊட்டப்படும்
rotary switch : (மின்.) சுழல் விசை : ஒரு சுழல் தண்டின் சுழற்சி மூலம் முனைகளிடையே தொடர்பு உண்டாகும் ஒரு மின் விசை
rotogravure : (அச்சு.) சுழல் செதுக்குருவ அச்சு வேலை : ஒரு செப்பு நீர் உருளையில் செய்யப்பட்ட செதுக்கு வேலைபாட்டிலிருந்து ஒரு சுழல் அச்சு எந்திரத்தின் மீது செதுக்குருவ அச்சு வேலை
rotor : (வானூ.) சுழலி : (1) விமானத்தில் ஒரு சுழல் சிறகு அமைப்பிலுள்ள முழுச் சுழற்சிப் பகுதி (2) ஒரு மாற்று மின்னோடியின் அல்லது மின்னாக்கியின் ஒரு சுழல் உறுப்பு
rotor-craft : (வானூ.) சுழலி விமானம்: எல்லா உயரங்களிலும் சுழலி அல்லது சுழலிகளினால் முழுமையாக அல்லது பகுதியாகத் தாங்கப்படுகிற ஒரு விமானம். இதில் விமானத்தின் காற்றழுத்தத் தளம், ஓர் அச்சினைச் சுற்றிச் சுழல்கிறது
rotten-stone : மெருகுச் சுண்ண மணற்கல் : நுண்ணிய பொடியாக விற்பனை செய்யப்படும் சிதைந்த சுண்ணாம்புக்கல். இது பரப்புகளை மெருகிடுவதற்குப் பயன்படுகிறது
rottenstone : (மர.வே.) சுண்ண மணற்கல் : சிதைந்து போன சுண்ணாம்புக் கல்லிலிருந்து செய்யும் நுண்ணிய தூள். இது மெருகேற்றுவதற்குப் பயன்படுகிறது
rotunda : (க.க.) வட்டக் கூடம் : வட்ட வடிவ அறை
rouge : (வேதி.) அய ஆக்சைடு : (Fe2O3:) இது அயச் சல்பேட்டைச் (FeSO4) சூடாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வண்ணச் சாயமாகவும், கண்ணாடி, உலோகம், நவமணிகள் ஆகியவற்றில் மெருகேற்றுவதற்கும் பயன்படுகிறது
roughcast :, (க.க.) குத்துச் சாந்து : சுவருக்குப் பூசப்பெறும் சரளைச் சுண்ணாம்பு கலந்த குத்துச்சாந்து
rough cut : (எந்.) அராவுதல் :கரடுமுரடான பகுதிகளை அராவி அறைகுறையாக மெருகிடுதல்
roughing tool : (எந்.) அராவு கருவி : சொரசொரப்பான பகுதிகளை நீக்குவதற்கு எந்திரங்களை இயக்குபவர்கள் பயன்படுத்தும் கருவி. பொதுவாக வார்ப்பிரும்பு, தேனிரும்பு, எஃகு போன்றவற்றை வெட்டுவதற்கு இது பயன்படுகிறது
rough lumber : முரட்டு வெட்டு மரம் : ரம்பத்தினால் வெட்டப்பட்ட சீர்வடிவற்ற வெட்டு மரம்
roundel : பதக்கம் : வட்டவடிவ