52
தில் தகடு மிக உயர்ந்த எதிர் மின்னழுத்தம் கொண்டிக்கும்போது, எதித்திசையில் பாயும் மின்னோட்டம்.
arc blow : (பற்.) சுடர் ஊதல் : சுடர் வார்ப்படத்தின்போது ஒரு சுடர் அதன் போக்கிலிருந்து திரிபுறுகிற அல்லது வெட்டி வீசுகிற போக்கு.
arc brazing : சுடர்ப் பித்தளை முலாமிடுதல் : ஒர் அடிப்படை உலோகத்திற்கும் ஒரு மின் முனைக்குமிடையே அல்லது இரு மின் முனைகளுக்கிடையே அமைந்த ஒரு மின் சுட்ரிலிருந்து வெப்பத்தினைப் பெறுவதற்கான மின் முறைப் பித்தளை முலாமிடும் முறை.
arc cutting : (பற்) சுடர் வெட்டல் : பொதுவாக கார்பன் மின் முனைகளைப் பயன்படுத்தி ஒரு மின் சுடர் மூலமாக உலோகங்களை வெட்டுதல்.
archimedean drill : ஆர்க்கிமீடியத் துரப்பணம் : ஒரு கருள் திருகியின் முனையில் பொருத்தப்பட்டுள்ள வெட்டுமுனை.
arcing : மின் விசையில் அல்லது மின்னாக் தொடர்புகளின் சுடரினை அமைத்தல்.
arc furnace : (மின்.)சுடர் உலை : ஒரு மின்சுடர் வாயிலாக வெப்பம் உண்டாக்கப்படும் ஒர் ஊதுலை.
arc jet engine : (விண்.) ஒளிவில் தாரை ஏஞ்சின் : இது ஒருவகை ராக்கெட் எஞ்சின். இதில் ஒளி வில்லைச் செலுத்துவதன் மூலம் செலுத்துவாயு சூடாக்கப்படுகிறது.
arc voltage : (புற்.) ஒளிவில் மின்னழுத்தம் : ஒளிவில்லினுள்டே செல்லும் மின் விசையின் அழுத்தம்.
arch : (க.க.) வில்வளைவு கவான் : பாலம், தளம் முதலியவற்றைத் தாங்கும் வில்வளைவு போன்ற வடிவமுள்ள கட்டுக்கோப்பு.
arch bar: (க.க.) கவான் தண்டு: ஒரு தட்டையான கவானைத் தாங்கும் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் ஒரு தட்டையான இரும்புத் தண்டு அல்லது பாளம்.
arch buttress : (க க) கவான் செங்கல்: ஒரு கவானின் ஆரத்திற்குப் பொருந்துகிற வகையில் தயாரிக்கப்பட்ட ஆப்பு வடிவச் செங்கற்கள்
archimedean principle : ஆர்க்கிமிடிஸ் தத்துவம் : ஒரு பாய்மத்தில் முழுழையாக அலலது பகுதியாக மூழ்கியிருக்குழ், ஒரு பொருள். அதனால் வெளியேற்றப்படும் பாய்மத்தின் எடைக்குச் சமமான ஒரு விசையின் மூலம் மிதக்கச் செய்யப்படுகிறது.
architect : (க.க.) கட்டிடக் கலைஞர்: கட்டிடங்களைத் திட்டமிட்டு, விடிவமைத்து, கட்டுமானம் செய்யும் உத்திகளில் தேர்ச்சி பெற்ற வல்லுநர் கட்டிடத்தைக் கட்டுவதை மேற்பார்வையிடுவதிலும் தேர்ச்சி பெற்ற நிபுணர்.