பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
539

rusting: (வேதி.) வண்ணச் சாய மிடல்: நவச்சாரக் கரைசலில் அல்லது வலுக்குன்றிய ஹைட்ரோ குளோரிக் அமிலக் கரைசலில் பளபளப்பான உலோகத் தோரணிகளை நனைத்து, வண்ணப் பூச்சு உறிந்துவிடாத் வகையில் சாயமிடுதல்

rust joint : (கம்.) துருப்பிணைப்பு: கசிவைத் தடுப்பதற்கு அல்லது மிகுதியான அழுத்தத்தைத் தாங்குவதற்கு ஓர் ஆக்சிகரணியைப் பயன்படுத்திச் செய்யப்படும் பிணைப்பு

ruthenium: (உலோ.) ருதேனியம்: விழுப்பொன் வகையைச் சார்ந்த அரிய திண்மத் தனிமம். இது பிளாட்டினத்தைக் கெட்டிப்படுத்துவதற்கும், பேனாமுனை உலோகக் கலவைகள் செய்வதற்கும் பயன்படும் அரிய உலோகம்