பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

542

தனிமமும், அலோகத் தனிமமும் அடங்கிய ஒரு கூட்டுப் பொருள்

salt of tartar : (வேதி.) பொட்டாசியம் கார்பனேட்டு: புடமிடப்பட்ட சாம்பரக் கரியகை (K2CO3H2O)

salt of vitriol : துத்தக் கந்தகி

salt of wisdom : பாதரச நவச்சிய பாசிகை

saltpeter : வெடியுப்பு : பொட்டாசியம் நைட்ரேட்டு (KNO3) வெடி மருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண் படிக உப்பு

samite : பொன்னிழையாடை : பொன்னிழைகள் இடையிட்டு நெய்யப் பெற்ற இடைக்கால உயர் ஆடை வகை

sandal wood : சந்தன மரம் : நறுமணமுடைய நெருக்கமான அகவரி வண்ண நெருக்கமுடைய கனமான மரம். கிழக்கிந்தியத் தீவுகளில் தோன்றியது

sand-bath : (வேதி.) மணற்புடம்: வேதியியல் செய்முறையில் சம வெப்பத்திற்காகப் பயன்படுத்தப்படும் வெம்மணற்கலம்

sand-box : (உலோ.) ஒத்து மணற்கலம் : வார்ப்புக்குப் பயன்படுத்தப்படும் மணற்கட்டி வார்ப்பு அச்சுரு

sand-glass : மணல் வட்டில் :மணல் நாழிகை வட்டில்

sandivar : கண்ணாடிப்புரை : கண்ணாடி உருக்கும் போது உண்டாகும் நுரை

sand blasting: மணல் ஊதைப் பீற்று: கண்ணாடி முதலியவற்றின் மேற்பரப்பைத் திண்ணியதாக்க வழங்கப்பெறும் அழுத்த வளியுடன் கூடிய மணல் பீற்று

sanding: மணல் மெருகு : மேற்பரப்புகளுக்கு மணல் மூலம் மெருகூட்டுதல்

sand paper: உப்புத் தாள்: கூர்மையான மணல் பூசிய தாள். இது உராய் பொருளாக, முக்கியமாக மரவேலைப்பாடுகளின் மேற்பரப்புகளுக்கு மெருகிடு பொருளாகப் பயன்படுகிறது. இதனைப் 'பளிங்குத்தாள்' என்றும் கூறுவர்

sand-pump: ஈர மணல் இழுப்புக் குழாய்: துரப்பணம் முதலிய கருவிகளைத் துப்புரவு செய்யும் கருவி; துப்புரவுக் குழாய்

sand-stone: மணற்பாறை : அழுத்தமுற்ற மணல் அடுக்குக்கல்

sandstone: மணற்பாறை: சிலிக்கா அய ஆக்சைடு, சுண்ணாம்புக் கார்பனேட்டு ஆகியவற்றின் மூலம் பிணைக்கப்பட்டு அழுத்தமுற்ற மணல் அடுக்குக்கல் கட்டிடக் கல்லாகப் பயன்படுகிறது. இயற்கை மணற்பாறையினால் சாணைக் கற்கள் செய்யப்படுகின்றன

sandwich : (குழை.) இடையீட்டுப் பொருள் : இடையிடைமாற்றுச் செறிவுப் பொருள். உலோகத் தகடுகளை அடுக்கி அல்லது மேலே பரப்பி அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்வதற்கு இது பயன்படுகிறது. தேவையான நோக்கங்களுக்குப் பயன்படுமாறு உலோக அடுக்குத் தகடுகளைத் தயாரிக்க இது பயன்படுகிறது

sanitary : சுகாதாரம் : உடல் நல மேம்பாட்டிற்குரிய, சாக்கடைக் கழிவு நீக்கத்திற்குரிய

sanitary sewer : சாக்கடை நீர்க்கால் : கழிவு நீரை வெளியேற்றுவதற்கான குழாய் அல்லது சுரங்க வழி

sanitation : (பொறி.) சாக்கடை